Categories: தமிழகம்

வைரலான இளைஞருக்கு செல்போன் வழங்கிய சிவகுமார்

மதுரையில் நடிகர் சிவகுமார் செல்போனை தட்டிவிட்ட விவகாரத்தில் அந்த மாணவனுக்கு புதிய செல்போன் வழங்கப்பட்டது.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழாவில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டார். அப்போது செல்ஃபி எடுத்த ஒரு இளைஞரின் செல்போனை சிவகுமார் படாரென தட்டிவிட்டார்.
இதில் அந்த இளைஞரின் செல்போன் உடைந்து சிதறியது. சட்டென்று நடைபெற்ற இந்த நிகழ்வால் அந்த இளைஞர் அதிர்ச்சியடைந்தார். சிவகுமார் செல்போனை தட்டிவிட்ட வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. பல்வேறு தரப்பினரும் சிவகுமாருக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு வந்த நிலையில் அந்த விவகாரத்தில் வருத்தம் தெரிவித்து புதிய வீடியோ ஒன்றையும் சிவக்குமார் வெளியிட்டார்.

Related Post

அதில், “ஆர்வமிக்க ரசிகர்கள் கட்டுக்கடங்காத கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு அப்படித்தான் நடந்து கொள்வார்கள். ஒரு பிரபல கலைஞன் அதையெல்லாம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். என்ன இருந்தாலும் சிவகுமார் செல்போனை தட்டிவிட்டது தவறு என பெருவாரியான மக்கள் நினைக்கும் பட்சத்தில் என் செயலுக்காக உளமாற வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். ஐயம் வெரி சாரி” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் நடிகர் சிவகுமார் சார்பில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவருக்கு 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புதிய செல்போன் வழங்கப்பட்டது. இதனை பெற்றுக் கொண்ட மாணவன் செல்போன் தட்டிவிடப்பட்ட காட்சியை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கிய இணையவாசிகளுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago