Categories: தமிழகம்

“ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகள்” தீபாவின் பிளக்ஸ் பேனர் !

கரூர்: கரூர் அருகே, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை ஆதரித்து, வைக்கப்பட்டுள்ள பேனர் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை ஆதரித்து, கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த ஜெகதாபியில், ‘ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகள்’ என்ற பெயரில், பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு உள்ளது.அதில், ‘அம்மா அவர்களின் நல்லாட்சி தமிழகத்தில் மீண்டும் மலரவும், நயவஞ்சகர்களின் பிடியில் இருந்து, அம்மாவின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை காப்பாற்ற அணி திரள்வீர்’ என, அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.அரியலுார்: அரியலுார் மாவட்டம், செந்துறை ஒன்றியம், மதுரா மத்துமடக்கி கிராமத்தை சேர்ந்த செந்துறை ஒன்றிய இளைஞர் பாசறை துணை செயலர் சந்திரசேகர், உறுப்பினர் ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர், தீபாவிற்கு ஆதரவு தெரிவித்து, மதுரா மத்துமடக்கி கிராமத்தில் நேற்று, சில டிஜிட்டல் பேனர்களை வைத்தனர்.
அதில், ‘துரோகிகளை கழகத்திலிருந்து நிரந்தரமாக அகற்ற வேண்டும். மறைந்த ஜெயலலிதாவின் நல்லாட்சி தமிழகத்தில் மீண்டும் மலர வேண்டும்.’நயவஞ்சகர்களின் பிடியிலிருந்து அம்மாவின் கழக கொள்கை மற்றும் கோட்பாடுகளை காப்பாற்ற, அணி திரள்வீர், மக்களின் சின்ன அம்மா திருமதி ஜெ.தீபா அவர்களின் தலைமையில்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Post
Share
Tags: vivegam

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago