நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் ரோந்து பணிக்கு தரமான வாகனங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. குமரி மாவட்டத்தில் 33 காவல் நிலையங்கள் உள்ளன. திருட்டு மற்றும் ஈவ்டீசிங், செயின் பறிப்பு உள்ளிட்ட சமூக விரோத சம்பவங்களை தடுக்கும் வகையில் ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் தனித்தனியாக இரு சக்கர வாகன ரோந்து போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ரோந்து பணியில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீசார் அந்தந்த பகுதியில் கண்காணிப்பில் இருப்பார்கள். இது தவிர காவல் கட்டுப்பாறை அறை ரோந்து போலீசார் தனியாக உள்ளனர். ஏதாவது பகுதியில் பிரச்னை என தகவல் வந்தால் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொள்வது, ரகளை செய்பவர்களை பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு வருவது போன்ற பணிகளை ரோந்து போலீசார் மேற்கொண்டு வந்தனர்.
எஸ்.பி. மணிவண்ணன் இருந்த சமயங்களில் ரோந்து போலீசாருக்கு பைக்குகளை வழங்கினார். ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் தனித்தனியாக பைக் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது பைக்கிற்கு பதில், 4 சக்கர டெம்போ டிராவலர் அல்லது வஜ்ரா வாகனத்தை ரோந்து போலீசாரிடம் கொடுக்கிறார்கள். இதுவும் நல்ல நிலையில் இல்லை. கண்டமான வாகனமாக இருப்பதால் இதில் வேகமாகவும் செல்ல முடியாது. மேலும் 4 சக்கர வாகனம் என்பதால், குறுகிய சாலைகளில் செல்ல முடியாது என்பதால், ஏதாவது மெயின் ரோடுகளில் ஓரமாக வண்டியை நிறுத்தி விட்டு ரோந்து போலீசார் அதில் அமர்ந்துள்ளனர். பைக்காக இருந்தால் சந்து பொந்துகளில் நுழைந்து செல்லலாம். இவ்வளவு பெரிய வாகனத்தை ரோந்து பணிக்கு தந்தால் எப்படி, எல்லா பகுதிகளுக்கும் செல்ல முடியும் என போலீசார் குமுறுகிறார்கள். ஆயுதப்படையில் இருந்து தான் ரோந்து பணிக்கு வாகனங்கள் கொடுக்கிறார்கள். இரு சக்கர வாகனங்கள் அல்லது ஜீப் போன்ற வாகனங்கள் இருந்தும் அவற்றை வேறு தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்வதால், இது போன்ற பெரிய வாகனத்தை ரோந்து பணிக்கு தள்ளி விடும் நிலை இருப்பதாக கூறப்படுகிறது. ரோந்து பணி என்பது மிகவும் முக்கியமான பணி ஆகும். குறிப்பாக செயின் பறிப்பு சம்பவங்கள், திருட்டு மது விற்பனை, அடி,தடி பிரச்னைகள் என்பது அதிக நெருக்கடியான பகுதியில் தான் நடக்கிறது. எனவே அங்கு ரோந்து போலீசார் செல்ல வசதியாக அவர்களுக்கு தரமான வாகனங்களை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…