Categories: தமிழகம்

`பேருந்தில் பிரசவித்த பழங்குடியின பெண்’ – பார்க்க ஓடி வந்த கேரள அமைச்சர்!

கேரளாவில் நடைபெறும் இடது முன்னணி ஆட்சியைப்பற்றி எதிர்க்கட்சிகள் அரசியல் ரீதியில் பல விமர்சனங்களை எழுப்பி வந்தாலும் முதலமைச்சர் பினராயி விஜயன் உட்பட பெரும்பாலான அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ரொம்பவும் எளிமையாகவே இருக்கிறார்கள். அதிலும் மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் அதில் முதலில் நிற்பது அவர்கள்தான். வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி அருகே கல்பெட்டா மருத்துவமனையில் நேரில் பார்த்த ஒரு சம்பவத்தை அப்பகுதி மக்களில் ஒருவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

அதில், “என்னுடைய பணி சம்பந்தமாகச் சுல்தான்பத்தேரி அருகிலுள்ள கல்பெட்டாவிலுள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன்.
அப்போது, வயநாடு மலைப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர், அரசுப் பேருந்தில் செல்லும்போது, பிரசவ வலி எடுத்து குழந்தை பெற்றுள்ளார். அவருக்கு கூடுதல் மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால் இந்த மருத்துவமனைக்கு பொதுமக்கள் உதவியுடன் கொண்டு வந்து சேர்த்ததைப் பார்த்தேன். பழங்குடியினப் பெண்ணுக்கு அப்பகுதி மக்கள் உதவி செய்தது எனக்கு வியப்பை உண்டாக்கியது ஒருபக்கமென்றால், சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணைப் பார்ப்பதற்காகக் கேரளா விவசாயத்துறை அமைச்சர் சுனில்குமார் அங்கு வந்தது பெரும் ஆச்சர்யத்தைக் கொடுத்தது.

Related Post

ஒரு விழாவுக்காக வயநாடு வந்திருந்த விவசாயத்துறை அமைச்சர் சுனில்குமார் இதை அறிந்து, உடனே மருத்துவமனைக்கு வந்து டாக்டரிடம் விசாரித்தார். நன்றாகக் கவனிக்கும்படி அவர்களிடம் கூறிவிட்டு அந்த பழங்குடியின பெண்ணையும் பார்த்துவிட்டுச் சென்றார். அவர் நினைத்தால் ஒரு போன் போட்டு மருத்துவமனைக்குப் பேசியிருக்கலாம் அல்லது மருத்துவமனையில் சேர்த்தாச்சே என்று கண்டுகொள்ளாமலும் சென்றிருக்கலாம். கேரளா மக்கள் கொடுத்து வைத்தவர்கள். அங்கு வந்தது அமைச்சர்தான் என்பது முதலில் எனக்கு தெரியவில்லை. காரணம், எந்தப் பந்தாவும் கும்பலும் இல்லாமல், நான்கு பேரோடு வந்தார். அங்கிருந்தவர்களிடம் விசாரித்து தான் கேட்டு தெரிந்து கொண்டேன். தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து பழகிய எனக்கு இது ஆச்சர்யமாக இருந்தது” என்றார்.

Share
Tags: vikatan

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago