Categories: தமிழகம்

இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் மீது கற்கள்,பாட்டில்களை வீசி தாக்குதல்

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்கள், பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் அச்சமடைந்த மீனவர்கள் கரை திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது 15க்கும் மேற்பட்ட ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள், பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் காயமடைந்த மீனவர்கள் இரவோடு இரவாக அச்சத்துடன் கரை திரும்பியுள்ளனர்.

சமீபத்தில் ராமேஸ்வரம் அருகேயுள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படை நடுக்கடலில் வைத்து சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்த பிறகு, மீனவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தொடங்கியுள்ளனர்.

Related Post

இந்த நிலையில், இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: tamil.oneindia.com

source: oneindia.com

Share
Tags: oneindia

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

11 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

11 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

11 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

11 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

11 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

11 months ago