நாம் தமிழர் கட்சியின் ஆர்கே நகர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் கலைக்கோட்டுதயம்.
நாம் தமிழர் கட்சியின் சின்னமாக கடந்த தேர்தலில் அறிவிக்கப்பட்ட அதே இரட்டை மெழுகுவர்த்திதான் இப்போதும் அக்கட்சிக்கு சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமர் மாவட்டம் தக்கலை அருகிலுள்ள கட்டிமாங்கோடு கிராமத்தில் அமரர் காசி உதயம் – அன்னப்பழம் இணையருக்கு மகனாக பிறந்தவர்.
அவரது தந்தை காசி உதயம் தமிழ் தேசியவாதி. அதன்படி இளமைக் காலத்தில் இலங்கையில் வீரகேசரி இதழில் செய்தியாளராக பணியாற்றிய அவர், பின்னாளில் தமது பெற்றோரைக் கவனித்துக் கொள்வதற்காக தாயகம் திரும்பினார். தினமலர்; நாளிதழில் அவர் எழுதிய அய்யா வைகுந்தார் வரலாறு அனைவராலும் போற்றப்பட்ட தொடராகும்.
அத்தகைய குடுபத்திலிருந்து வந்த கலைக்கோட்டுதயமும் தந்தையைப் போலவே தமிழ் தேசியவாதியாக தன் அரசியல் பணியைத் தொடர்ந்தார்.
பள்ளிப்படிப்பை சொந்த ஊரிலும், கல்லூரிப் படிப்பை அகஸ்தீஸ்வரம் விவேகானந்தர் கல்லூரியிலும் முடித்த கலைக்கோட்டுதயம், படிக்கும் காலத்திலேயே பகுதி நேர தொழில் செய்து தனது கல்விச் செலவுகளை தாமே பார்த்துக் கொண்டார்.
தமிழன் தொலைக்காட்சியை ஆரம்பித்து, கடந்த 15 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
சமூக பணியில் முன்பு தமிழ் தேசியத்தை தாங்கி பிடித்த பாட்டாளி கட்சியோடும், பின்பு தமிழ்தேசியத்தோடு பயணித்த விடுதலை சிறுத்தைக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார்.
தற்பொழுது நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
Source: tamil.oneindia.com
source: oneindia.com
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…