சென்னை: கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
சமீபத்தில் ராமேஸ்வரம் அருகேயுள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படை நடுக்கடலில் வைத்து சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்த பிறகு, மீனவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், இன்று கச்சத் தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் சிலர், மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், சுற்றி வளைத்து அவர்களை கைது செய்தனர்.
மொத்தம் 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கச்சத்தீவை, இலங்கைக்கு, இந்திராகாந்தி தலைமையிலான மத்திய அரசு, வழங்கியது. இப்போது இலங்கை கட்டுப்பாட்டில் அந்த இடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: tamil.oneindia.com
source: oneindia.com
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…