Categories: தமிழகம்

வீட்டை காலி செய்யுங்கள்..ஓ.பி.எஸ்க்கு நெருக்கடி!

சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. அமைச்சர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் க்ரீன்வேஸ் இல்லத்திலிருந்து 10 நாட்களுக்குள் வெளியேறுமாறும், சட்டமன்ற உறுப்பினர் விடுதியை வேண்டுமானால் பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று ஆளுங்கட்சி நெருக்கடி தருவதாக ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆளும் தரப்பு நெருக்கடிகளை கொடுக்க துவங்கிவிட்டது. அ.தி.மு.கவின் இரண்டாம்கட்ட தலைவராக இருந்தவர் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியை பிடித்ததும் முதல் அமைச்சரவையில் நிதி அமைச்சராக நியமிக்கபட்டார்.

மூத்த அமைச்சர் என்பதால் அமைச்சர்களுக்கு அரசு சார்பில் ஒதுக்கபடும் பங்களாவில் அவருக்கு முக்கியத்துவமும் கொடுக்கபட்டது. கீரின்வேஸ் சாலையில் அமைந்துள்ள அரசு பங்களாவில் பெரிய பங்களாவான தென் பண்ணை வீடு அவருக்கு ஒதுக்கபட்டது. இந்த வீட்டில் தான் கடந்த ஐந்து ஆண்டுகளாக வசித்த வந்தார். 2016-ம் ஆண்டு அ.தி.மு.கவே மீண்டும் ஆட்சியை பிடித்தால் அதே வீட்டில் பன்னீர் செல்வம் வசிக்க துவங்கினார். ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு முதல்வராக அவர் பதவியேற்றதும் அவரது வீட்டிற்கான பாதுகாப்புகள் அதிகரிக்கபட்டது. வெடிகுண்டு தடுப்பு காவலர்கள் சோதனை செய்த பிறகே வீட்டிற்குள் யாரும் செல்லமுடியும் என்ற நிலை இருந்தது. இந்த வீட்டின் பின்புறத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளை பன்னீர்செல்வம் வளர்த்து வந்தார்.இந்நிலையில் கடந்த 5-ம் தேதி முதல்வர் பதவியை ராஜினமா செய்தார் பன்னீர் செல்வம் காபாந்து முதல்வராக செயல்பட்டார். ஆனால் இரண்டு நாட்களிலே சசிகலாவிற்கு எதிராக தீடிர் என பன்னீர்செல்வம் போர்க்கொடி துாக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இது அ.தி.மு.க தலைமைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. ஆட்சியை கைபற்றும் முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால் சட்டசபையில் அவரால் பெரும்பாண்மையை நிருபிக்க முடியாமல் போனதால் முதல்வர் பதவியை இழந்து பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவி மட்டுமே அவர் கைவசம் தற்போது உள்ளது. முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற மறுதினமே பன்னீர்செல்வம் வீட்டிற்கு பொதுத்துறை சார்பில் நோட்டிஸ் அனுப்பட்டுவிட்டது.

Related Post

இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக பன்னீர்செல்வம் வீட்டை காலி செய்யாமல் இருப்பதால், அரசு தரப்பில் இருந்து அவருக்கு நெருக்கடி கொடுகக்பட்டு வருகிறது. பத்து நாட்களுக்குள் வீட்டை காலி செய்யவேண்டும் என்று அறிவுறுத்தபட்டுள்ளதாம். சட்டமன்ற உறுப்பினராக அவருக்கு சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் வீடு ஓதுக்கபட்டுள்ளதால் அமைச்சருக்கான இல்லத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள்.

பொதுவாக ஆட்சி மாற்றம் நடைபெற்றாலே ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் வீட்டை காலி செய்ய குறிப்பிட்ட கால அவகாசம் வழங்குவார்கள். ஆனால் பன்னீருக்கு மறுதினத்தில் இருந்தே நெருக்கடிகளை கொடுத்துவருகிறார்கள். அவர் வீட்டிற்கு முன்பு பேரிகார்டுகளை போட்டு பாதையை கூட அடைத்து வைத்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் புலம்புகின்றார்கள்.

Share
Tags: vikatan

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

11 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

11 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

11 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

11 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

11 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

11 months ago