Categories: தமிழகம்

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர் சங்கரய்யாவின் நுாற்றாண்டு விழா நடந்தது. மா.கம்யூ.,மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். தி.மு.க.,மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன், அப்துல்வகாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய நெல்லை கண்ணன்,’தி.மு.க.,தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா கோயில்களுக்கு சென்றதால்தான் தி.மு.க.,வெற்றிபெற்றது என பா.ஜ.,வினர் பிரசாரம் செய்கின்றனர். ஆனால் பி.ஜே.பி.,நாய்களும் கோயிலுக்கு செல்பவர்கள்தானே.. அவர்கள் ஏன் வெற்றிபெறவில்லை.
திருநெல்வேலியில் ஜெயித்துவிட்டார்கள்.திருநெல்வேலி தொகுதியில் தி.மு.க.,வேட்பாளர் ஏ.எல்.எஸ்.,மகன் லட்சுமணன் தேர்தல் பணியில் ஈடுபடவில்லை. பணமும் செலவழிக்கவில்லை. அவனிடம் சொல்லிப்பார்த்தும் கேட்கவில்லை.இதுபற்றி கட்சியின் ஆர்.எஸ்.பாரதி,டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரிடம் பேசினேன். கட்சியில் இருந்து 4 கோடி ரூபாய் கொடுத்துள்ளார்கள். ஆனால் செலவழிக்கவில்லை. கூட்டணிக்கட்சிக்கும் பணம் தரவில்லை என சிலர் என் வீட்டுக்கு வந்து கூறினார்கள். திருநெல்வேலியில் தாமரை மலர்ந்துவிட்டதே.. நானும் திருநெல்வேலியில் மூன்று முறை தேர்தலில் நின்றுபார்த்துவிட்டேன். எனக்கு ஓட்டுபோடக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளார்கள். எவனாவது அறிவில்லாத முட்டாப்பயலுகளுக்கு ஓட்டுபோடுவார்கள்.ஓ.பி.எஸ்.,மகன்கள் ஹவாலா பணம் கொண்டுசென்றபோதுதான் மொரிஷியஸ் தீவில் சிக்கிக்கொண்டனர். அதில் இருந்து தப்பிக்க ஓ.பி.எஸ்., பிரதமரை சந்திக்க டில்லி சென்றார். அவர் எதற்கு செல்கிறார் என தெரியாமல் இ.பி.எஸ்.,ம் டில்லி சென்றார். முதல்வருக்கு எதிராக தி.மு.க.,வில் ஒரு கோஷ்டியினர் கோபத்தில் உள்ளனர். ஒரு அமைச்சர் என்னிடம் பேசினார். தலைவர் ரொம்ப சீரியஸ்ஆக நடவடிக்கை எடுக்கிறார் என்றார்.இரண்டு அமைச்சர்களை முதல்வர் ஸ்டாலின் கண்டித்துள்ளார். அதில் இருந்து இப்படி தி.மு.க.,வினர் இப்படி ஆரம்பித்துவிட்டார்கள் இவ்வாறு நெல்லை கண்ணன் பேசினார்.இதில் திருநெல்வேலியில் போட்டியிட்டு தோல்வியடைந்த தி.மு.க.,வேட்பாளர் லட்சுமணனை நாய் என்றும் ரூ 4 கோடிவாங்கிக்கொண்டு செலவழிக்காதவர் என தி.மு.க.,கட்சி குறித்தும் அவதுாறாக பேசியது குறித்து திருநெல்வேலி மாவட்ட வழக்கறிஞர்அணி நிர்வாகி உமாமகேஸ்வரன், தொழில்நுட்ப அணி நிர்வாகி பலராமன் போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணனிடம் புகார் அளித்தனர். கடந்த ஆட்சியில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராக அவதுாறாக பேசிய வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தற்போதும் தி.மு.க.,குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

11 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

11 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

11 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

11 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

11 months ago

கூடுதல் தளர்வுகள் இன்றி ஊரடங்கு நீட்டிப்பு: கலெக்டர் தகவல்

வேலுார்:வேலுார் மாவட்டத்தில், கூடுதல் தளர்வுகள் இன்றி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் இன்று…

11 months ago