Categories: தமிழகம்

நிறுத்தி வைத்திருந்த மின்சார ரயில் பின்னோக்கி சென்றதால் பரபரப்பு

அரக்கோணம்:அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில், நிறுத்தி வைத்திருந்த மின்சார ரயில், டிரைவர் இல்லாமல் பின்னோக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சென்னை சென்ரலுக்கு இன்று மாலை 5:30 மணிக்கு புறப்பட்டு செல்லும் மின்சார ரயில் ஒன்று ஆறாவது பிளாட்பாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.இதன் டிரைவர் சென்னையை சேர்ந்த பரமேஸ்வரன், 45, ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். மாலை 5:00 மணிக்கு டிரைவர் இல்லாமலேயே இந்த ரயில் திடிரென பின்னோக்கி சென்றது. இதையறிந்த ரயில்வே ஊழியர்கள் இந்த மார்க்கத்தில் மின்சார இணைப்பை துண்டித்து ரயிலை நிறுத்தினர்.இது குறித்து அரக்கோணம் ரயில்வே பொறியாளர்கள் கூறியதாவது: இந்த ரயிலின் மீது பேண்டா கிராம் என்ற கொக்கி உள்ளது.
இது தான் மின் கம்பத்தில் இருந்து ரயிலை இயக்க மின்சாரத்தை கொண்டு வருகிறது.இந்த கம்பி உடைந்து விட்டது. இதை சென்னையில் தான் சரி செய்ய முடியும். இதனால் இந்த ரயில் நகராமல் இருக்க பேண்டா கிராம் கொக்கி மீது கட்டை வைத்து மின்சாரத்தை தடுப்பார்கள். ஆனால் டிரைவர் கட்டை வைக்க மறந்து விட்டதால், திடிரென அதிக மின்சாரம் பாய்ந்ததால் ரயில் 300 மீட்டர் பின்னோக்கி சென்றது.அதற்குள் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ரயில் நின்று விட்டது. ஒரு வேளை மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருந்தாலும் சிறிது துாரம் தான் ஓடியிருக்கும். இதனால் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு எதுவும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago