Categories: தமிழகம்

ரயில்வே பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

திருப்பதி அடுத்த ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி அடுத்த ரேணுகுண்டா ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் ஆந்திர மாநிலம் சீகாகுளத்தை சேர்ந்த ஹரிபுரம் ஆனந்தராவ். கடந்த மாதம் சொந்த ஊருக்கு சென்று இந்த மாதம் இரண்டாம் தேதி மீண்டும் பணியில் சேர்ந்தார்.

Related Post

இந்நிலையில் வழக்கம்போல் பணியில் இருந்த ஆனந்தராவ் அதிகாலை 4.15 மணிக்கு ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் உள்ள ஆயுத கிடங்கில் தன்னிடம் இருந்த துப்பாக்கியை கொண்டு சுட்டு தற்கொலை செய்து கொண்டார். சத்தம் கேட்டு அங்கு சென்ற போலீசார் பார்பதற்குள் கங்காதர் உயிரிழந்து கிடந்தார்.
இதுகுறித்து ரேணிகுண்டா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அஞ்சு யாதம் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனந்தராவ் தற்கொலைக்கு குடும்ப பிரச்சனையா அல்லது மேலதிகாரி மூலம் பணிச்சுமை காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago