Categories: தமிழகம்

சாதி ஆணவத்துடன் அரசு அலுவலகத்தில் கொடூரம்.. சி.பி.ஐ.எம் கடும் கண்டனம்.!!

சாதி ஆணவத்துடன் கிராம நிர்வாக உதவியாளரை காலில் விழவைத்த அதிர்ச்சி சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவிக்கப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (எம்) தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கோவை மாவட்டம் ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு தன்னுடைய சொத்து விவரங்களை சரிபார்ப்பதற்காக வந்த கோபால்சாமி, அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளர் முத்துசாமியுடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார், முத்துசாமியை சாதி ஆதிக்க மனோபாவத்துடன் எச்சரித்தது மட்டுமல்லாமல், விஏஓ அலுவலகத்திலேயே தன்னுடைய காலில் விழுந்து மன்னிப்பும் கேட்கச்சொல்லியுள்ளார்.

பட்டியல் சமூகத்தை சார்ந்த அரசு ஊழியர் ஒருவரை அரசு அலுவலகத்திலேயே காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்த இத்தகைய இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும். நாம் நாகரீகமான சமுதாயத்தில்தான் வாழ்க்கிறோமா என்கிற சந்தேகத்தை இப்படிப்பட்ட சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. இக்கொடுமையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

Related Post

காலில் விழவைத்த கோபால்சாமி மீது நான்கு பிரிவுகளின் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்பதோடு, சாதி ஆதிக்க மனோபாவத்துடன் நடந்து கொண்ட கோபால்சாமிக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டுமெனவும் இப்படிப்பட்டவர்களை பிணையில் bளிவரமுடியாத வழக்குகளின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வலியுறுத்துகிறது.

சாதி ஆணவத்தின் காரணமாக நிகழும் கௌரவக் கொலைகளும், அவர்களுக்குரிய நிலங்கள் பறிக்கப்படுவதும், அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதும், அவமானப்படுத்தப்படுவதுமான கொடுமைகள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இனிமேல் இப்படிப்பட்ட கொடுமைகள் நிகழாவண்ணம் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago