Categories: தமிழகம்

நாமக்கல், பெரம்பலூரில் கரோனா கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 1,956 ஆக பதிவாகி, இன்று மீண்டும் ஒருநாள் கரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,60,229 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 187 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 189 என்று இருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கடைகள் இயங்க கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் பால், மருந்துக் கடைகளைத் தவிர பிற கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள், பூங்காக்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படும்.
உணவு விடுதிகள், டீக்கடைகளில் மாலை 5 மணிக்கு மேல் பார்சல் வழங்க மட்டுமே அனுமதி என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Related Post

அதேபோல் பெரம்பலூர் நகராட்சியில் உள்ள ஏழு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரும்பாவூர், லப்பை, குடிகாடு பேரூராட்சியில் பிரதான கடைவீதிகளில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. பால், காய்கறி மருந்துகளைத் தவிர பிற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் திங்கட்கிழமை தோறும் பக்தர்களின்றி பூஜைகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago