தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு ஆதரவு அதிகம் : ஆய்வு அறிக்கை

www.patrikai.com Tamil news website

Pulses PRO Tamil news website

Sign in / Join

www.patrikai.com Tamil news website

type here… Search

www.patrikai.com Tamil news website

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு ஆதரவு அதிகம் : ஆய்வு அறிக்கை

By Mullai Ravi

August 8, 2021

0

0

Related Post

செ ன்னை

ச மீபத்தில் நடந்த ஆய்வின்படி தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு சுமார் 81% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆதரவு தெரிவிப்போர் மற்றும் எதிர்ப்பு தெரிவிப்போர் எண்ணிக்கை குறித்து ஒரு ஆய்வு நடந்துள்ளது. இந்த ஆய்வு சென்ற மாதம் பொதுச் சுகாதார இயக்குநர் செல்வவிநாயகம் வழிகாட்டுதலின்படி நடந்துள்ளது.

இந்த ஆய்வு சென்னை உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நடந்துள்ளது. ஆய்வுக் குழுவினர் ஒவ்வொரு மாநிலத்திலும் சுகாதார சேவை துணை இயக்குநர் தலைமையில் ஆய்வு செய்துள்ளனர். சென்னையில் இந்த ஆய்வை சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சென்னை மாநகராட்சியின் ஆதரவுடன் நடத்தி உள்ளனர்.

மாநிலத்தில் மொத்தம் 95 தொகுப்புக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த தொகுப்புக்களில் 30 வீடுகள் சேர்க்கப்பட்டன. அந்த வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ஒரு உறுப்பினர் மட்டும் தேர்வு செய்யப்பட்டு கேள்விகள் கேட்கப்பட்டன. கொரோனா தடுப்பூசி குறித்த அவர்கள் கருத்தைக் கேட்பதற்கு முன்பு அவர்கள் ஊசி போட்டுக் கொண்டுள்ளனர் என்பதும் கேட்கப்பட்டது.

அந்த உறுப்பினர் தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தால் அதை அவர் போட்டுக் கொண்டதற்கான காரணங்கள் என்னென்ன என்பதைக் கேட்டுப் பதிவு செய்யப்பட்டது. அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றால் அவர்கள் போட்டுக் கொள்ளாத காரணம் மற்றும் எதிர்காலத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்வார்களா என்பதும் கேட்கப்பட்டது.

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதோரில் 80.3% ஆண்களும் 81.6% பெண்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தயாராக உள்ளனர். ஆனால் தடுப்பூசி போட்டுக்கொள்ள 19.7% ஆண்கள் மற்றும் 18.4% பெண்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வில் 82.5% நகரங்களில் வசிப்போரும் 79.7 கிராமங்களில் வசிப்போரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயார் எனத் தெரிவித்துள்ளனர். அதே வேளையில் கிராமங்களில் வசிப்போரில் 20.3% பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ள எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

இந்த ஆய்வில் மூலம் 18-44 வயதானவர்களில் 83.1% பேரும் 45-60 வயதானவர்களில் 81.8% பேரும் 60 வயதுக்கு மேற்பட்டோரில் 72.4% பேரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தயாராக உள்ளனர். ஆனால் 60 வயதுக்கு மேற்பட்டோரில் 27.6% பேர் த்டுப்பூசிக்க் எதிராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

article தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள் Next article நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளருக்குக் கர்நாடக அரசு ரூ,10 லட்சம் பரிசு

www.patrikai.com Tamil news website

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago