Categories: தமிழகம்

நாளை முதல்., சென்னை மக்களுக்கு நல்ல செய்தி சொன்ன ககன்தீப் சிங்.!

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான,

* ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை,

* ஜாம் பஜாா் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை, ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜாா் , என்எஸ்சி போஸ் சாலை, குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை,

Related Post

* ராயபுரம் சந்தை பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டா் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோயில் வரை, அமைந்தகரை சந்தை பகுதியில் அமைந்தகரை காவல் உதவி மையம் முதல், புல்லா நிழற்சாலை திருவிக நகா் பூங்கா சந்திப்பு வரை,

* ரெட்ஹில்ஸ் சந்தை பகுதியில் ஆஞ்சநேயா் சிலை முதல் அம்பேத்கா் சிலை வரை ஆகிய பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளை ஆக.9-ஆம் தேதி காலை 6 மணி வரை மூட உத்தரவிடப்பட்டிருந்தது.

தற்போது இந்த தடை உத்தரவு நாளை காலையுடன் முடிவடையும் நிலையில், இந்த 9 இடங்களிலும் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் வழக்கம்போல செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும் கடைகள், வணிக வளாகங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்” என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago