Categories: தமிழகம்

ஒரே ஒரு போராட்டம். மேகதாது பிரச்னை முடிந்து விட்டது – அண்ணாமலை பேச்சு!

கர்நாடகாவுக்கும் தமிழகத்துக்கும் இடையே நிலவி வந்த மேகதாது பிரச்னை முடிந்து விட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கர்நாடக பாஜக அரசை எதிர்த்து தமிழக பாஜக சார்பில் கடந்த 5ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. அப்போராட்டத்தில் மேகதாது திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார்.

Related Post

இதையடுத்து நாடாளுமன்றத்தில் கர்நாடகாவை சேர்ந்த எம்.பி மேகதாது அணை பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர், மேகதாது அணை குறித்து கர்நாடகத்தின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்க முடியாது.
தமிழகத்தின் அனுமதியின்றி இதனை செயல்படுத்த முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தமிழகத்திற்கு நல்லது செய்ய திட்டமிட்டிருக்கும் பாஜக அரசுக்கு நல்லதை செய்து வருகிறது. பாஜகவின் சித்தாந்தத்தை விரும்புவோர் காட்சியின் சேர்ந்து கொள்ளலாம். மேகதாது அணை பிரச்னை முடிந்துவிட்டது. தமிழகத்தை கேட்காமல் அணை கட்ட அனுமதிக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்து விட்டது என்று தெரிவித்தார்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago