சேலத்தில் அனைத்துக் கடைகளும் நாளை(ஆக.9) முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படும் என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் கடந்த இரு தினங்களாக கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சேலம் மாநகர எல்லைக்குள் செயல்படும் கடைகள், வணிக நிறுவனங்கள், மால்கள், ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் ஆகியவை நாளை முதல் வருகிற 23 ஆம் தேதி வரை மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படும், ஞாயிற்றுக்கிழமை கடைகள் செயல்பட அனுமதி இல்லை.
வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்தின் முக்கிய கால்நடைச் சந்தைகளான கொங்கணாபுரம் வாரச் சந்தை, வீரகனூர் வாரச் சந்தை மற்றும் மேட்டூர் அணை பூங்கா ஆகியவற்றை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே சேலம் மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத்தலமான ஏற்காட்டுக்கு சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…