சட்டக் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டிய காமுகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காமராஜர் காலனி பகுதியை சார்ந்தவன் லால் சரண் என்ற பரத் லால். இவன் சொந்தமாக போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்தி வரும் நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக சட்டக்கல்லூரியில் நான்காம் வருடம் பயின்று வரும் மாணவி ஒருவர் புகைப்படம் எடுக்க இவனின் கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது மாணவியை வரவேற்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்த கொடூரன், மாணவி மயங்கியதும் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனை வீடியோவாக எடுத்து வைத்து மாணவியின் செல்போன் எண்ணுக்கு அனுப்பி மிரட்டி, மாணவியை மீண்டும் ஸ்டூடியோவுக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான்.
இதனால் மாணவி கர்ப்பம் ஆன நிலையில், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தாயாரிடம் கூறி கதறி அழுதுள்ளார். பின்னர் தாயார் ஸ்டுடியோவுக்கு சென்று லால் சரணிடம் தனது மகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கொடுத்துவிடும் படி கெஞ்சவே, காமுக கொடூரன் இருவரையும் ஆபாசமாக பேசி விரட்டி அடித்துள்ளான்.
இதனால் வேறுவழியின்றி தாயும், மகளும் காவல் நிலையம் சென்று புகார் அளிக்க, விசாரணையில் தனது ஸ்டூடியோவுக்கு வரும் அழகான பெண்களிடம் யூட்யூபில் ஷார்ட் பிலிம் எடுக்க இருப்பதாக கூறி, நடிக்க வாய்ப்பு தந்து நடிகை ஆக்குவதாக பேசி, இவனது பேச்சில் மயங்கும் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி சீரழித்தது அம்பலமானது.
இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் லால் சரணின் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். மேலும், ஆபாச புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து வைத்து யாரும் மிரட்டினால், அவர்கள் மீது தைரியமாக புகார் அளிக்கலாம் என்றும், அவர்கள் சமூக வலைதளங்களில் வீடியோ அல்லது புகைப்படத்தை பதிவேற்றினாலும் அதனை 24 மணி நேரத்தில் அழித்து விடலாம் என்றும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த பரத் என்கிற லால் சரண் தன்னை பாஜக நகர இளைஞரணி பொதுச்செயலாளர் என்று கூறி, தனக்கு தானே பிளக்ஸ் வைத்து பேமஸான நபர் என்றும் கூறப்படுகிறது.
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…