Categories: தமிழகம்

கட்- அவுட், பேனர் கலாச்சாரம் வேண்டாம்: அமைச்சர் அன்பில் மகேஷ்

கட்- அவுட், பேனர்களை வைக்கக் கூடாது என நீதிமன்றத்திற்கு சென்றதே திமுகதான், கட்சியினர் அதை மறந்து விடக்கூடாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திமுகவினரிடம் கேட்டுக்கொண்டார்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

செப்டம்பர் 1ம் தேதி ஒன்பதாம் வகுப்பு முதல் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று தான் முதல்வர் கூறியுள்ளார். இதுகுறித்த முறையான “செயல்பாட்டு வழிமுறைகள் குறித்த கூட்டம்” நாளை நடைபெற உள்ளது. அதில் முதல்வருடன் ஆலோசித்த பின்னர் தான் முடிவு எடுக்கப்படும்.

Related Post

பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியில் உள்ள அனைவரும் தடுப்பூசி கள் போட்டுள்ளார்களா என்பதை அந்த அந்த மாவட்ட கல்வி அலுவலரிடம் கேட்டு உறுதி செய்து வருகிறோம். மாணவர்கள் இடை நிற்றல் ( drop out) கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த லிஸ்ட் வந்தவுடன் அதை வைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கட் – அவுட், பேனர்களை வைக்கக் கூடாது என நீதிமன்றத்திற்கு சென்றதே திமுக என்பதை கட்சியினர் மறந்து விடக்கூடாது. போஸ்டர் கலாச்சாரத்தை பின்பற்றக்கூடாது என்பதுதான் எங்கள் நிலைபாடு. திமுகவினர் இதனை கடைபிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவு றுத்தி வருகிறேன்.

அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் நீட் தேர்விற்கு மிக மிக குறைவாகத்தான் தேர்வெழுத உள்ளனர். காரணம் கொரோனோ மற்றும் பள்ளிகள் இல்லாதது. நீட்டில் இருந்து விலக்கு பெறுவதே இந்த ஆட்சியின் லட்சியம். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

SHARE

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

10 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

10 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

10 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

10 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

10 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

10 months ago