நள்ளிரவில் சாலையில் நிர்வாண ஓட்டம்.. பிறந்த நாள் கொண்டாட்டத்தில் எல்லை மீறிய இளைஞர்கள்!

தஞ்சாவூரில் 10 -க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நள்ளிரவு நேரத்தில் தனது நண்பரை நிர்வாணமாக்கி பிறந்தநாள் கொண்ட்டாட்டத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நண்பர்கள் இணைந்து பொது வெளியில் சர்ச்சைக்குரிய வகையில் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த வீடியோவில், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே சில தினங்களுக்கு முன் இரவு சாலையின் நடுவே 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அப்போது கேக் வெட்டிய இளைஞர் உடம்பில் டிரெஸ் எதுவும் இல்லாமல் நிர்வாண கோலத்தில் இருந்தார். கேக் வெட்டியதுமே நிர்வாணமாக இருந்த இளைஞர்மீது அவரது நண்பர்கள் முகம் முழுவதும் கேக்கினைப் பூசுகின்றனர்.

பின்னர் அந்த இளைஞர் நிர்வாணமாகவே சாலையில் ஓடுகிறார். அவரை துரத்திக்கொண்டே நண்பர்களும் செல்கின்றனர். பெரும் கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டிற்கு வெளியே வந்துள்ளனர். அப்போது நிர்வாணமாக ஓடிய இளைஞரையும் அவரை சில இளைஞர்கள் துரத்திச் சென்றதையும் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.குறிப்பிட்ட தூரம் ஓடிய பிறகு மீண்டும் கேக் வெட்டிய இடத்திற்கே வந்து விடுகின்றனர்.

மும்பை: `காட்டிக்கொடுத்த ரத்தக்கறை!’ – பிறந்த தன் குழந்தையை 7-வது மாடியிலிருந்து வீசிய சிறுமி!

பின்னர் நிர்வாணமாக இருக்கும் இளைஞரைத் தூக்கி கீழே போடுகின்றனர்.அந்த இளைஞர் அப்படியே நிர்வாணமாகவே தரையில் படுத்திருக்கிறார்.சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக இந்த கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. பின்னர் நண்பர் ஒருவர் துண்டு ஒன்றை தர அதனை நிர்வாணமாக இருக்கும் இளைஞர். கட்டிக்கொள்கிறார்.

நண்பரை நிர்வாணமாக்கி இளைஞர்கள் பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த அனைவரையும் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம், “மது போதையின் உற்சாகத்தில் சாலையின் நடுவில் கூச்சலிட்டு கேக் வெட்டுதல்,பெரிய பட்டா கத்தியில் கேக் வெட்டுதல் போன்ற சர்ச்சைக்குரிய பிறந்தநாள் கொண்டாட்டத்தை பார்த்திருக்கிறோம்.ஆனால் தஞ்சாவூரில் எல்லை மீறி நிர்வாணமாகக் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர். அவர்கள் அனைவருமே கல்லூரி மாணவர்கள் என தெரிகிறது. புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் அறை எடுத்து தங்கியுள்ள வெளியூரை சேர்ந்த இளைஞர்கள் ஆகியோர் அருகே உள்ள கல்லூரி ஒன்றில் படிக்கின்றனர்.

அவர்கள் தங்களது நண்பரின் பிறந்த நாளுக்காக இது போன்ற ஏற்பாட்டை செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அனைவரும் மது போதையில் இருந்ததால் உற்சாக மிகுதியில் இதனை செய்ததாகத் தெரிகிறது. சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ முகம் சுழிக்க வைப்பதாக இருக்கிறது. போலீஸாரின் கவனத்துக்கும் இந்த சம்பவம் சென்றுள்ளது. ஆனால் இதுவரை வழக்கு எதுவும் பதியவில்லை எனத் தெரிகிறது” என்றனர்.

Share
Tags: vikatan

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago