Categories: தமிழகம்

கடலூரில் 2ஆம் நிலை காவலர் பணியிடங்களுக்கு உடற்தகுதி தேர்வு..!

கடலூரில் 2ஆம் நிலை காவலர் பணியிடங்களுக்கு உடற்தகுதி தேர்வு இன்று அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி தமிழகத்தில் சீருடை தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இதன் பிறகு நடைபெறும் உடல்தகுதி தேர்வு கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

Related Post

தற்போது இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான இந்த உடற்தகுதி தேர்வானது கடலூரில் உள்ள அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. கடலூர் மாவட்டத்தில் 3,794 பேர் உடற்தகுதி தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 1,045 பேர் பெண்கள், 2,748 பேர் ஆண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவர்.

இந்த பணிகள் அனைத்தும் கடலூர் மாவட்ட எஸ்.பி. சக்தி கணேஷன் தலைமையில் நடைபெறுகிறது. கொரோனா காரணமாக நாள் ஒன்றுக்கு 500 பேர் வீதம் என இந்த தேர்வை நடத்துகின்றனர். முதலில் தேர்வர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்படுகிறது, அதனை தொடர்ந்து உயரம், மார்பளவு, தொடர்ச்சியாக 7 நிமிட ஓட்டம் ஆகியவை நடத்தப்படுகிறது. பலத்த பாதுகாப்போடு உடற்தகுதி தேர்வின் முதற்கட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago