Categories: தமிழகம்

பி.இ., பி.டெக்., கலை அறிவியல் படிப்புகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழக உயர்கல்வித்துறை.!

பி.இ படிப்புகளுக்கு செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

BE மற்றும் B.Tech படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 25 ஆம் தேதி ரேண்டம் எண் வெளியாகும். செப்டம்பர் ஏழாம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் கலந்தாய்வை முடித்து மாணவர் சேர்க்கை நடத்தப்படும் எனவும், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளது. பொறியியல் மற்றும் கலை அறிவியல் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tngasa.org மற்றும் www.tngasa.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் நாளை முதல் www.tneaonline.org என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

Related Post

கல்லூரி விண்ணப்ப பதிவிற்கு கடந்த ஆண்டு பெறப்பட்ட அதை கட்டணங்கள் தற்போதைய ஆண்டுக்கும் பொருந்தும். பொறியியல் கலந்தாய்வு தர வரிசை எண் வெளியிடப்படும் தேதிகள் மற்றும் கலந்தாய்வுகள் உள்ளிட்டவை பின்னர் அறிவிக்கப்படும் எனவும் உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

கலை மற்றும் அறிவியல் படிப்பு: www.tngasa.org மற்றும் www.tngasa.in

பொறியியல் படிப்புகள்: www.tneaonline.org

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago