Tamil News Today Live: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை திமுகவின் பழிவாங்கும் நடவடிக்கை – எம்.ஆர். விஜயபாஸ்கர்

Go to Live Updates

தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.

வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை என்ற புதிய துறையை உருவாக்க திட்டம்

தமிழக முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களின் அடிப்படை வசதிகளையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்கும் திட்டமில்லை

கொரோனா 3வது அலை அச்சுறுத்தலால் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்கும் திட்டமில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுக சாமி விசாரணை ஆணையத்திற்கு 11வது முறையாக மேலும் 6 மாத கால அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Live Updates

9:33 (IST) 24 Jul 2021

ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சுதிர்தா முகர்ஜி வெற்றி

ஒலிம்பிக் தொடரில், டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சுதிர்தா முகர்ஜி வெற்றி பெற்றுள்ளார். மற்றொரு வீராங்கனை மணிகா பத்ராவும் வெற்றி பெற்றுள்ளார்.

9:22 (IST) 24 Jul 2021

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை திமுகவின் பழிவாங்கும் நடவடிக்கை – எம்.ஆர். விஜயபாஸ்கர்

எனக்கு சொந்த வீடு கிடையாது. பல ஆண்டுகளாக பல்வேறு தொழில்களை செய்து வருகிறேன். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்பது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. சோதனையில் எந்த ஆவணமும் சிக்கவில்லை. எடுக்கப்பட்ட பணத்திற்கு கணக்கு உள்ளது என அதிமுக முன்னாள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

9:06 (IST) 24 Jul 2021

5 ஆண்டுகால கனவு நிறைவேறியுள்ளது- வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானு

எனது 5 ஆண்டுகால கனவு நிறைவேறியுள்ளது என்று ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானு நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மேலும், தங்கப் பதக்கத்தை வெல்ல என்னால் முடிந்த அளவு முயற்சி செய்தேன் என்றும் மீராபாய் சானு கூறியுள்ளார்.

8:48 (IST) 24 Jul 2021

நீர் வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. இன்று மாலைக்குள் 30 ஆயிரம் கன அடியாக நீர் வர வாய்ப்புகள் உள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

8:44 (IST) 24 Jul 2021

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு மிகக் கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிகக்கனமழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

8:30 (IST) 24 Jul 2021

மீராவின் வெற்றி, இந்தியாவுக்கு ஒரு பிரகாசமான தொடக்கம் – ஸ்டாலின் வாழ்த்துகள்

பளு தூக்கும் போட்டியில் இந்தியாவின் மீராபாய் வெள்ளிப்பதக்கம் வென்றதைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு தலைவர்கள் தங்களின் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர். தமிழக முதல்வர் முக ஸ்ஆலின் இந்தியாவுக்கு இது பிரகாசமான துவக்கம் என்று கூறியுள்ளார்.

8:08 (IST) 24 Jul 2021

பா.ரஞ்சித்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

‘சார்பட்டா’ படத்தில் எம்.ஜி.ஆர்-க்கும், விளையாட்டு துறைக்கும் தொடர்பில்லாத‌து போல் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

7:33 (IST) 24 Jul 2021

ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டி – இறுதிச்சுற்றில் இருந்து வெளியேறிய இந்தியா

ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் இருந்து இந்தியா வெளியேறியுள்ளது. இந்திய வீர‌ர் சவுரப் சவுதாரி, 137 புள்ளிகளுடன் பட்டியலில் 7ம் இடத்தை பிடித்துள்ளார். தகுதிச்சுற்றில் முதலிடம் பிடித்து முன்னேறிய சவுரப் பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார்.

6:42 (IST) 24 Jul 2021

Related Post

இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தார் மீராபாய்

ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் 49 கிலோ பளு தூக்கும் பெண்கள் பிரிவில் இந்தியாவின் சானு சைக்கோம் மீராபாய் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார். இந்த ஒலிம்பிக்கில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும்.

6:25 (IST) 24 Jul 2021

டென்னிஸில் இந்தியாவின் சுமித் நாகல் 2வது சுற்றுக்கு தகுதி

ஒலிம்பிக் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகல் 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

6:22 (IST) 24 Jul 2021

தீபிகா – பிரவீன் ஜாதவ் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்கில் கலப்பு இரட்டையர் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி-பிரவீன் ஜாதவ் இணை தோல்வி அடைந்தது. காலிறுதிப்போட்டியில் தென்கொரிய ஜோடியிடம் 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி அடைந்துள்ளார்.

6:17 (IST) 24 Jul 2021

சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதி

பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபா புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

5:45 (IST) 24 Jul 2021

மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை

சென்னை பூவிருந்தவில்லி அருகே தனியார் கல்லூரி மாணவி 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

தேர்வு அறையில் மாணவி செல்போன் வைத்திருந்ததை தேர்வு கண்காணிப்பாளர் கண்காணித்து வெளியேற்றியதால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மாணவி தற்கொலை குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

5:26 (IST) 24 Jul 2021

நிமோனியாவுக்கு தடுப்பூசி -மா.சுப்பிரமணியன்

நிமோனியா, மூளைக் காய்ச்சல் நோய்களில் இருந்து குழந்தைகளை காக்க தடுப்பூசி போடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 9 லட்சத்து 23 ஆயிரம் குழந்தைகளுக்கு நியூமோகோக்கல் தடுப்பூசி போடப்படுகிறது.

5:21 (IST) 24 Jul 2021

தமிழகம் முழுவதும் நூலகங்களை திறக்க உத்தரவு

கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள நூலகங்களை தவிர்த்து பிற நூலகங்களை திறக்கலாம் என பொது நூலகத்துறை இயக்குனர் நாகராஜ முருகன் அறிவித்துள்ளார்.

4:25 (IST) 24 Jul 2021

இந்தியாவில் ஒரே நாளில் 39,097 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 23 மணி நேரத்தில் 39,097 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் ஒரே நாளில் 546 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 35,087பேர் தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

4:18 (IST) 24 Jul 2021

சிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் குறைப்பு

சிபிஎஸ்இ பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் மதிப்பெண்கள் பிரிப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் http://www.cbseacademic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

4:06 (IST) 24 Jul 2021

டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்றது சீனா

டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கிச்சுடுதலில் சீனா வீராங்கனை யாங் தங்கம் வென்று அசத்தியுள்ளார். துப்பாக்கிச் சுடுதலில் ரஷ்யா 2வது இடத்தையும், சுவிட்சர்லாந்து 3வது இடத்தையும் பிடித்தன.

3:55 (IST) 24 Jul 2021

ஒலிம்பிக் ஹாக்கி – இந்தியா வெற்றி

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணியின் ஆண்கள் பிரிவு லீக் ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மதுரையில் கைது

இந்துமத கடவுள்களை விமர்சித்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மதுரையில் கைது செய்யப்பட்டார். இந்து கடவுள்களையும் பிரதமர் உள்ளிட்ட தலைவர்களையும் இழிவாக பேசியதாக கிறிஸ்தவ மதபோதகர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago