Categories: தமிழகம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: `1,153 பேருக்கு சம்மன்; 813 பேர் ஆஜர்!’ – விசாரணை ஆணையம் தகவல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்தின், 27 கட்ட விசாரணைகளின் இடைக்கால அறிக்கையை கடந்த மே 14-ம் தேதி முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைத்தார் ஆணையத்தின் நீதிபதி அருணா ஜெகதீசன். அந்த அறிக்கையில், இந்தப் போராட்டம் குறித்து காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தேவையற்ற வழக்குகளை திரும்பப் பெற பரிந்துரை செய்யப்பட்டது.

இதையடுத்து, 2018, மே 22-ம் தேதிக்கு முன்னர் இந்தப் போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் உள்ளிட்ட சில வழக்குகளைத் தவிர ஏனைய வழக்குகள் திரும்பப் பெறப்படுவதக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் பணி வழங்கிட வேண்டும், காவல்துறையால் கைது செய்யப்பட்ட 94 நபர்களில் சிலருக்கு காயங்களும், பலருக்கு மன உளைச்சலும் ஏற்பட்டதைக் கருதி அவர்களுக்கு நிவாரணம் வழங்கிடவும் ஆணையம் பரிந்துரைத்தது.

அதனடிப்படையில், தகுதியின் அடிப்படையில் பணியிடமும், போலீஸாரால் கைது செய்யப்பட்ட 93 நபர்களுக்கு நிவாரணமாக தலா ரூ.1 லட்சமும், இதுதவிர ஒரு நபர் வேறு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலேயே உயிரிழந்துவிட்டதால் வாழ்வாதாரம் இழந்து வாரும் அவரின் 72 வயது தாய்க்கு ரூ.2 லட்சமும் நிவாரணத்தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இதையடுத்து, ஒரு நபர் ஆணையத்தின் 28வது கட்ட விசாரணை கடந்த 5-ம் தேதி தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் தொடங்கி இன்று (15-ம் தேதி) நிறைவு பெற்றது.

இந்த விசாரணையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதுகுறித்து ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தமிழக அரசிடம் ஒரு நபர் ஆணையம், தாக்கல் செய்த இடைக்கால அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார். அதற்கு ஆணையம் தரப்பிலிருந்து நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

Related Post

இடைக்கால அறிக்கையில் பரிந்துரைத்த கோரிக்கைகளை அவர் ஏற்று அதன்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் வேலையும், நிவாரணத்தையும் வழங்கியுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 28-வது கட்ட விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளிப்பதற்காக, துப்பாக்கிச்சூடு நடந்த அன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் 102 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் 95 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். மொத்தமாக 28 கட்ட விசாரணையையும் சேர்த்து இதுவரை 1,153 பேருக்கு ஆணையம் தரப்பிலிருந்து சம்மன் அனுப்பப்பட்டதில் 813 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.

இதில், 718 பேர் மனுதாரர் தரப்பு சாட்சியம், 94 பேர் காவல்துறை சார்பில் சாட்சியம் அளித்தவர்கள். ஒருவரை மட்டும் ஆணையம் தரப்பிலிருந்து சம்மன் அனுப்பி விசாரித்துள்ளோம். இதுவரை மொத்தம் 1150 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 1,127 ஆவணங்கள் மனுதாரர் தரப்பிலிருந்தும், காவல்துறையில் சார்பில் 23 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சுமார் 300 நபர்களிடம் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கிறோம்.

விசாரணைக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், விசாரணையை முடிக்க கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இல்லையெனில் இதற்குள் விசாரணை முழுமையாக நடைபெற்று முழு அறிக்கையும் அரசிடம் தாக்கல் செய்யப்பட்டிருக்கும். துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஆணையத்தின் முன்பு ஆஜரான 95 காவலர்கள் இழப்பீடு கேட்டு அபிடவிட் தாக்கல் செய்துள்ளனர். அதில், தகுதியானவர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு மனுவில் கூறப்பட்டுள்ள தகவலின் உண்மைத்தன்மை அடிப்படையில் தகுதியானவர்களுக்கு ஆணையம் தரப்பிலிருந்து பாகுபாடின்றி நிவாரணங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

29வது கட்ட விசாரணை, வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி துவங்கி ஒரு வாரம் நடைபெற உள்ளது. அதில், ஸ்டெர்லைட் குடியிருப்பில் தங்கியிருந்தவர்கள், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களை உடற்கூறாய்வு செய்த மருத்துவர்கள், தடய அறிவியல் காவலர்கள் மற்றும் அன்றைய தினம் பணியிலிருந்த காவல் கண்காணிப்பாளர்கள், தென் மண்டல காவல்துறை தலைவர் உள்ளிட்ட உயரதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கப்படுவர்” என்றார்.

Share
Tags: vikatan

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago