Categories: தமிழகம்

தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி.. முதலமைச்சர் அறிவிப்பு எப்போது வரும்?

நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்த திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. தற்போது அறிவித்த வாக்குறுதிகளில் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அதில் ஒன்று கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி. கடந்த சட்டமன்றத் தேர்தலில்போது, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது.

இதனிடையே, தேர்தலுக்கு முன்பு கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் வழங்கப்பட்ட விவசாய கடன், விவசாய நகைக் கடன், குழுக் கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்வதாக அப்போதைய முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
அதன் அடிப்படையில், அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களும் விவசாயிகளுக்கு கடன் இல்லா சான்று வழங்கியது. ஆனால், 3 மாதங்களுக்கு மேல்ஆகியும் விவசாயிகள் அடமானமாக வைத்த நகைகளை தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன்சங்கங்கள் திரும்ப அளிக்காமல் அலைக்கழித்து வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.

ஆனால், கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி குறித்த அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், 2018 -19, 2019 -20, 2020 -2021 நிதியாண்டுகளில் வழங்கிய நகை கடன் விவரங்களை அனுப்பி வைக்குமாறு, கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்களுக்கு, கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

Related Post

இதையடுத்து, விரைவில் தொடங்கவுள்ள தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன் தள்ளுபடி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திட்டத்தில் பெரும்பாலும் விவசாயிகளே நகைகளை அடகு வைத்துள்ளனர். இதனால் அவர்கள் அரசின் அறிவிப்புக்கு காத்திருக்கின்றனர்.

newstm.in

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago