Categories: தமிழகம்

சென்னையில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் ரத்து – மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: சென்னையில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் கிடையாது என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. மூன்று நாட்களுக்கு பிறகு நேற்று தடுப்பூசி போடும் பணி தொடங்கிய நிலையில் தட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி வந்ததும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Related Post

மூன்று நாட்கள் இடைவேளைக்கு பிறகு நேற்று சென்னையில் கொரோனா தடுப்பூசி மையங்களில் தடுப்பூசியானது பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. நேற்றைய தினம் கூட மிக குறைந்த எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் தான் மக்களுக்கு செலுத்தப்பட்டு இருந்தன. இந்த சூழலில் இன்று மீண்டும் தடுப்பூசி தட்டுப்பாட்டின் காரணமாக இன்றைய தினம் தடுப்பூசி மையங்கள் செயல்படாது என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தற்போது அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு என்ற நிலை பரவலாக நிலவி வருவதை காண முடிகிறது. பல மாவட்டங்களில் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் இருக்கும் சூழலில் போதிய தடுப்பூசி கையிருப்பு இல்லாத சூழலில் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் அவ்வப்போது நிறுத்தப்பட்டு வந்தன. சமீப நாட்களை தடுப்பூசி தட்டுப்பாடு என்பது மிக அதிக அளவில் இருக்கிறது. ஒன்றிய அரசானது போதிய தடுப்பூசிகளை தமிழகத்திற்கு ஒதுக்காததே தடுப்பூசி தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணமாக உள்ளது. சென்னையை பொறுத்தவரை இதுவரை 26,50,000க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago