Categories: தமிழகம்

8 மாத குழந்தையால். ஜாமீன் பெற்ற பப்ஜி மதன் மனைவி!

ஆபாச யூடியூபர் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

சேலத்தை சேர்ந்த பப்ஜி மதன், விளையாட்டை சொல்லி கொடுப்பதாக கூறி ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வந்தார். லைவ் ஸ்ட்ரீமிங்கில் அவர் ஆபாசமாக பேசியதற்கு எதிராக 150க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்தன. அந்த புகார்களின் பேரில் பப்ஜி மதன் மீது வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டனர். ஆனால் ஆஜராகாத மதன் தலைமறைவாகிவிட்டார்.

தர்மபுரியில் உள்ள தனது உறவினர் வீட்டில் ஓடி ஒளிந்து கொண்ட மதன் போலீசார் தன்னை கண்டுபிடிக்காத வண்ணம் விபிஎன் எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வந்தார்.
இதனிடையே மதனுக்கு உதவி செய்து வந்த அவரது மனைவி கிருத்திகா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மதன் செய்த அனைத்து கேவலமான செயலுக்கும் கிருத்திக உடந்தையாக இருந்தது தெரியவந்தது. கிருத்திகாவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தர்மபுரியில் பதுங்கியிருந்த மதனும் கைது செய்யப்பட்டார்.

Related Post

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆபாசமாக பேசி கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதும் ஆடி கார், பங்களா என் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவை அனைத்தையும் முடக்கிய போலீசார் மதனையும் கிருத்திகாவையும் சிறையில் அடைத்தனர். ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

8 மாத குழந்தையுடன் சிறையில் இருந்த கிருத்திகாவின் மனு மீது விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கிருத்திகாவுடன் சேர்ந்து அவரது 8 மாதக் குழந்தையும் சிறையில் இருந்ததால் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago