தர்மபுரியில் கைது. சென்னையில் விசாரணை. பப்ஜி மதன் சொந்த ஊரில் மக்கள் கொந்தளிப்பு

யூட்யூப் சேனல் மூலம் ஆன்லைனில் தடை செய்யப்பட்ட ப்ப்ஜி விளையாட்டு மூலம் சிறுவர்-சிறுமிகளிடம் தகாத வார்த்தைகளில் பேசிய விவகாரத்தில் சிக்கியவர் பப்ஜி மதன். இவர் மீது அடுக்கடுக்கான புகார் வந்து குவிந்த நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இவரை கைது செய்ய முயற்சித்தனர். ஆனால் அதற்குள் பப்ஜி மதன் தலைமறைவானார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்ட்டது.

இதனையடுத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார் மதனின் சொந்த ஊரான சேலத்திற்கு சென்று விசாரணை நடத்திய நிலையில், மதனின் மனைவி கிருத்திகா மற்றும் அவரது தந்தையை கைது செய்த காவல்துறையினர் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய நிலையில், மதனின் யூடியூப் சேனலை நிர்வகித்து வந்தவர் அவரது மனைவிதான் என்பது தெரியவந்தது.
இதனிடையே தலைமைறைவான பப்ஜி மதன் தனது பெண் தோழிகளிடம் பேசிய ஆடியோ இணையத்தில் வெளியாகியது.

அந்த ஆடியோவில் நித்தியாந்ந்தாவே வெளியில் இருக்கிறார். நம்மை யாரும் பிடிக்க முடியாது என்று கூறியிருந்தார். இதனையடுத்து மதன் குறித்து தேடுதல் வேட்டையில் இறங்கிய சிபிசிஐடி போலீசார் இன்று தர்மபுரியில் மதனை கைது செய்தனர். இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட மதனை சேலம் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளதாக வதந்தி பரவிய நிலையில், விசாரணையை பார்க்க பொதுமக்கள் அதிகளவில் இங்கு கூடியிருந்தனர். ஆனால் சில மணி நேரங்கள் காத்திருந்த பொது மக்கள் அந்த தகவல் வதந்தி என்று உறுதியானதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Post

இந்நிலையில், பப்ஜி மதன் வீடு அமைந்துள்ள சேலம் தாதகாப்பட்டி பகுதி பொதுமக்கள் மதனின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், சிறுவர்-சிறுமிகளை விளையாட்டு வளையத்துக்குள் கொண்டு வந்து ஆபாசக் கருத்துக்களைத் திணித்து அவர்களை அடிமைப் படுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாது என மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவரை நிணைத்து பொதுமக்கள் பலரும் வசைபாடி செல்கின்றனர்.

இதனிடையே தர்மபுரியில் கைது செய்யப்பட்ட மதன் தற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.ஏற்கனவே மதனின் மனைவி கிருத்திக்கா மற்றும் தந்தையை கைது செய்ய போலீசார் அவர்கள் இருவரையும் சிறையில் அடைத்துள்ள நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதனிடம் தீவிர விசாரணை நடத்திய பின்பு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தனக்கு முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மதன் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago