Categories: தமிழகம்

சட்டவிரோதமாக விற்பனை.. பள்ளிக்கூட இடத்தை மீட்க சென்னை மாநகராட்சி ஆணையரிடம் மார்க்சிஸ்ட் மனு.!

சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட பள்ளிக்கூட இடத்தை மீட்க கோரி சென்னை மாநகராட்சி ஆணையரிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு வழங்கியுள்ளனர்.

தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (எம்) கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ” பெருநகர சென்னை மாநகராட்சி – மண்டலம் 8 – வில்லிவாக்கம் சிங்காரம்பிள்ளை அரசினர் உதவிபெறும் பள்ளியின் கட்டடங்களை அரசின் அனுமதியின்றி சட்டவிரோதமாக இடித்து வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர். சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியின் நிலத்தை மீட்டு, கல்வி பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர்ந்து இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்(சிஎம்டிஏ), பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய் துறை, பெருநகர சென்னை பெருநகர மாநகராட்சி செயற்பொறியாளர், காவல் ஆய்வாளர், வி.1.வில்லிவாக்கம் போக்குவரத்து காவல் நிலையம் ஆகியோரிடம் பெறப்பட்ட விவரங்களில் சிங்காரம்பிள்ளை அரசு உதவிபெறும் பள்ளி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

எனவே, பள்ளிக்கூட இடத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட இடத்தை மீட்டு, பள்ளியின் பயன்பாட்டிற்கு பயன்படுத்த கோரி 29.12.2020 அன்று அப்போதைய ஆணையர் திரு.பிரகாஷ் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

Related Post

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்வைத்த கோரிக்கையை ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றுவதாக திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர், இன்றைய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது உறுதியளித்திருந்தார். மேலும், திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஆட்சிக்கு வந்தவுடன் சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்ட பள்ளியின் இடங்கள் மீட்கப்படும் என துண்டுபிரசுரமும் வெளியிடப்பட்டது.

மேற்கண்ட விவரங்கள் உள்ளடக்கிய மனுவினை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ககன்தீப் சிங் பேடி அவர்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா மனு அளித்தார். கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முருகேஷ் உடனிருந்தார்.

கடந்த காலத்தில் சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்ட சிங்காரம்பிள்ளை மேல்நிலைப்பள்ளியின் இடத்தை மீட்டு, மீண்டும் கல்வி பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் முறையீட்டிற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்த ஆணையர், மேலும் கோரிக்கை மனுவின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு அதிகாரிகளை பணித்துள்ளதாக தெரிவித்தார் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago