Categories: தமிழகம்

யூடியூபர் மதன் மீது போலீஸார் வழக்குப் பதிவு

யூடியூப் சேனலில் பெண்களை தரக்குறைவாக பேசிய வழக்கில் தலைமறைவான பப்ஜி மதன் மீது 4 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளார். ஆன்லைன் விளையாட்டுகளை யூட்யூபில் ஒளிபரப்புவது மற்றும் யூட்யூப் சேனலில் பல வீடியோக்களை வெளியிடுவது என யூட்யூப் பிரபலமாக இருப்பவர் மதன். தனது யூட்யூப் சேனலிலும், ஆன்லைன் விளையாட்டின்போது மதன் தொடர்ந்து பெண்களை கொச்சையான வார்த்தைகளால் பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தியது.இதுகுறித்து பல பகுதிகளிலும் பப்ஜி மதன் மீது புகாரளிக்கப்ப்பட்ட நிலையில் மதனை விசாரணைக்கு நேற்று வர சொல்லி புளியந்தோப்பு சைபர் க்ரைம் போலீஸார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று மதன் காவல்நிலையத்தில் ஆஜராகத்தால் தலைமறைவானதாக அறிவிக்கப்பட்டு தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறாக போலீஸ் தேடிக் கொண்டிருக்கும்போதும் விபிஎன் மூலமாக ஆன்லைன் விளையாட்டிற்கு வந்த பப்ஜி மதன் தன்னை கைது செய்வது மூலமாக பேசுவதை ஒடுக்க முயற்சிப்பதாக கூறியுள்ளார். அதேசமயம் வழக்கம்போல கெட்ட வார்த்தைகளில் பேசாமல் தத்துவமாக பேசியுள்ளார். பப்ஜி மதனின் யுடியூப் சேனல்களை முடக்கவும், மதனை கைது செய்யவும் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்நிலையில், யூடியூபர் மதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.மேலும், பப்ஜி விளையாட்டு மூலமாக சிறுவர்களிடம் ஆபாசமாகப் பேசியதாக வந்த புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீஸர் நடவடிக்கை எடுத்துள்ளனர். பெண்களை ஆபாசமாக பேசுதல் தகவல் தொழில் நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் மதன்மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago