எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் கட்சியை நடத்துவோம் – சசிகலா புது ஆடியோ வெளியீடு

திருச்சி மாவட்ட அதிமுக, அமமுக, அதிக நிர்வாகிகளிடம் சசிகலா நடராஜன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிச்சயம் வருவேன் என்று நம்பிக்கையளித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா கடந்த ஜனவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார். பெங்களூருவில் இருந்து தமிழகம் திரும்பிய சசிகலாவிற்கு வழிநெடுங்கிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சசிகலா விடுதலையான உடன் அதிமுக தலைமை பொறுப்பேற்பார் என்றும் தீவிர அரசியலில் இறங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென அரசியிலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.

இந்நிலையில் அதிமுக நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள் என பலரிடமும் சசிகலா பேசும் ஆடியோ தொடர்ந்து வெளியாகிக் கொண்டுள்ளது. இதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டத்தில் உள்ள திவாகரனின் ஆதரவாளரான அல்லூர் சீனிவாசன், அதிமுக முன்னாள் நிர்வாகி, அமமுக நிர்வாகி மற்றும் சசிகலாவின் தீவிர ஆதரவாளர் ஒத்தக்கடை செந்தில் ஆகியோரிடம் சசிகலா பேசினார்.

Related Post

தற்போது அதிமுக மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் அருள்ஜோதியிடம் சசிகலா பேசியுள்ள ஆடியோ வெளியாகியுள்ளது. இதில், கடந்த 25 ஆண்டுகளாக கட்சி பொறுப்பில் இருப்பதாகவும். திருச்சி மக்களவைத் பொது தொகுதியில் தலித் எழில்மலையை நிறுத்தி வெற்றி பெற வைத்த அதிமுகவில் இன்றைக்கு ஜாதி ஆதிக்கம் நிலவுகிறது. இதனால், அதிமுகவிற்கு மிக மோசமான தோல்வி கிடைத்துள்ளது. நீங்க (சசிகலா) வர வேண்டும். கட்சியை வழி நடத்த வேண்டும் என்று அருள்ஜோதி கோரிக்கை விடுத்துள்ளார்.

நிச்சயம் வருவேன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் கட்சியை நடத்துவோம். எல்லாம் சரியாகி விடும் என்று சசிகலா உறுதி கூறுகிறார். நடந்து முடிந்த சட்டப்யேரவைத் தேர்தலில் அருள்ஜோதி திருச்சி மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாய்ப்பு மறுக்கப்பட்டு, பத்மநாபன் என்பவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் அவரிடம் சசிகலா பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

படப்பிடிப்பில் ஜெய்க்கு நிகழ்ந்த விபரீதம்.! ஆனாலும், அவர் செய்த நல்ல விஷயம்.!

பிரபல தமிழ் நடிகர் ஜெயின் அர்ப்பணிப்பை கண்டு படக்குழு ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.கோலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஜெய்.…

4 hours ago

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை. சற்றுமுன் பரபரப்பு தகவல்.!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சனிக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து கிழக்கு…

4 hours ago

இது எப்போ வரும்னு தெரியல.. கன்னடத்தில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம்.. ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்.!!

KGF இரண்டாவது பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நிலையில் அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.கன்னட படங்களில்…

4 hours ago

அருள்நிதியின் ‘தேஜாவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

அருள்நிதி நடித்து வரும் 'தேஜாவு' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.தேஜாவு என்று தலைப்பிட்டுள்ள அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கும் இந்த…

4 hours ago

கணவனான காதலன்.. சீரியல் நடிகையின் 8 வருட கனவு.. தலைமையேற்ற புன்னகை மன்னன்.!!

பாடலாசிரியர் சினேகனின் திருமணம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரும் பிக்பாஸ் நிகழ்ச்சி…

4 hours ago

ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது ‘பிசாசு 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ஆண்ட்ரியா நடித்து வரும் 'பிசாசு 2' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது.2014 ஆம் ஆண்டு…

4 hours ago