Categories: தமிழகம்

ஊரடங்கில் இன்று முதல் தளர்வு… காய்கறி, மளிகை கடைகள் திறப்பு

தமிழகத்தில் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட ஒரு வார கால ஊரடங்கு இன்று அமலுக்கு வந்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடந்த 24ம் தேதி அமலுக்கு வந்தது. இது இன்று காலை 6 மணியுடன் முடிவுக்கு வந்த நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை, வரும் 14ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. தொற்று பரவல் அதிகமாக உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு, கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மளிகை, காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Post

மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்படலாம். அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும், தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவல் குறைவாக உள்ள மற்ற மாவட்டங்களில் மேற்கண்ட தளர்வுகளுடன், மின் பணியாளர்கள், பிளம்பர்கள் ஆகியோர் இ-பதிவுடன் பணிக்கு செல்லலாம் என்றும், ஆட்டோ மற்றும் டாக்சிகளில் இ-பதிவுடன் பயணிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கொடைக்கானல், குற்றாலம் உள்ளிட்ட மலைப்பகுதிகளுக்கு அத்தியாவசிய தேவைகளுக்காக செல்வோர், மாவட்ட ஆட்சியர்களிடம் இ-பாஸ் பெறுவது அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago