Categories: தமிழகம்

செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தில் பாரத் பயோடெக் அதிகாரிகள் ஆய்வு!

தமிழகத்தில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மத்திய அரசு இலவசமாக தடுப்பூசிகள் வழங்குகிறது. 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டோருக்கு தமிழக அரசு கொள்முதல் செய்கிறது. தடுப்பூசி கொள்முதலுக்கு தமிழக அரசு, உலகளாவிய டெண்டர் விடுத்த நிலையிலும் அதில் சிக்கல் நீடிப்பதாக தெரிகிறது.

இதனால், செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி ஆலையை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த தடுப்பூசி ஆலையை குத்தகைக்கு வழங்குமாறு தமிழக அரசு கோரியுள்ளது. இது தொடர்பாக, ஆலோசனை மேற்கொண்டு முடிவை தெரிவிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இத்தகைய சூழலில், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

Related Post

இந்த நிலையில், செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தில் பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகள் இன்று காலை ஆய்வு மேற்கொண்டனர். கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பயோடெக் நிறுவன இணை இயக்குநர் சுஜித்ரா தலைமையில் இந்த ஆய்வு நடைபெற்றது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago