Categories: தமிழகம்

திக்கு தெரியாத நிலையில் விசாரணை: சாட்சிகளாக மாறிய பள்ளி நிர்வாகிகள்

மாணவியரை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கியதாக, சென்னை, கே.கே.நகர், பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில், ஏற்கனவே அவர் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கேட்டு, பள்ளி தாளாளர் ஷீலா ராஜேந்திரன் மற்றும் முதல்வர் கீதா கோவிந்தராஜன் ஆகியோரை, அசோக் நகர் காவல் நிலையத்துக்கு வரவழைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது, ‘இந்த விவகாரம் தொடர்பாக, இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. ராஜகோபாலன் மீது, எங்களுக்கு எந்தப் புகாரும் இல்லாதபோது, நாங்கள் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்’ என, பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறியுள்ளனர். அதற்கு, போலீஸ் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை.

வேறு வழி

இரு நாட்களுக்கும் மேல், அவர்களிடம் இதே கேள்வி கேட்கப்பட்டு, ஒரே பதிலே பெறப்பட்ட நிலையில், வேறு வழியின்றி, அவர்கள் இருவரையும் சாட்சிகளாக்கி இருக்கின்றனர், போலீசார்.’எங்களை குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்தாலாவது, புதிய சாட்சிகளை தயார் செய்து, ராஜகோபாலன் உள்ளிட்ட எங்கள் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. ‘எங்களை சாட்சிகளாக்கினால், கோர்ட்டில் ராஜகோபாலன் தரப்பு, எங்களை குறுக்கு விசாரணை செய்யும்போது, நாங்கள் பிறழ்சாட்சியாகத் தானே ஆவோம். அதெல்லாம், ராஜகோபாலனுக்குத் தானே சாதகமாக முடியும்’ என, பள்ளி நிர்வாகம் தரப்பில் கேட்டுள்ளனர்.

Related Post

‘அதெல்லாம் எங்களுக்குத் தெரியும்; இப்போது, நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்’ என, போலீஸ் தரப்பில் சொல்லப்பட, நிர்வாக தரப்பில், அதற்கு ஒப்புக் கொண்டிருக்கின்றனர். அதனால், திக்குத் தெரியாத திசையில், யாருடைய அழுத்தத்துக்கோ பணிந்து, வேண்டா வெறுப்பாக வழக்கை, போலீசார் கையாள்வது தெரிகிறது என, போலீஸ் தரப்பிலேயே சிலர் புலம்புகின்றனர்.

தண்டனை

வழக்கை நியாயமாக நடத்தி, குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றத்தை நிரூபித்து, அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தால் தானே, இதே தவறை அடுத்தவர் செய்யாமல் இருப்பார். அந்த உணர்வு இல்லாமலேயே, எல்லா வழக்குகளையும் போலவே, போலீசார் இந்த வழக்கையும் கையாள்வதாக தெரிகிறது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago