ஒரே ஒரு ஓடிபி மூலம் ஓய்வுபெற்ற அதிகாரியிடம் ரூ.53 லட்சம் சுருட்டல்! மோசடி நபர் சிக்குவாரா?

மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் அன்பரசனை தொடர்பு கொண்டு, தான் எஸ்பிஐ வங்கியில் இருந்து பேசுவதாக கூறி அன்பரசுவின் செல்போனிற்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார்.

ஒரே ஓரு ஓடிபி மூலம் ஓய்வுபெற்ற ONGC ஊழியரின் வங்கி கணக்கிலிருந்து 53 லட்சம் பணத்தை மர்மநபர் சுருட்டியுள்ளார். நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்த டிஜிட்டல் திருடன் யார்.. போலீஸ் வலையில் சிக்குவாரா? என கேள்விகள் எழுந்துள்ளன.

நூதன முறையில் வங்கி கணக்கில் இருந்து திருடட்பட்ட 53 லட்சம் பணத்தை 16 மணி நேரத்தில் அண்ணாநகர் சைபர் கிரைப் போலீசார் மீட்டுள்ளனர். மோசடி நபர் சிக்குவாரா?

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் 18வது தெருவில் வசித்து வருபவர் 66 வயதான அன்பரசன். ONGC நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் தனது மகனுடன் வசித்து வருகிறார்.

இவர் கடந்த 37 வருடமாக தனது வங்கி கணக்கை வில்லிவாக்கம் எஸ்.பி.ஐ. கிளையில் வைத்துள்ளார். கடந்த 2 வருடத்திற்கு முன்பு தன் பணிஓய்வு பெற்ற தொகையை வைப்புநிதி எனப்படும் நிலையான வங்கிக் கணக்கில் சேமிப்புத் தொகையாக வைத்துள்ளார்.

அந்தத் தொகையை அன்பரசனின் அனுமதி கேட்காமல் FD சேமிப்பு கணக்கிலிருந்து நீக்கிவிட்டு, சாதாரண வங்கி கணக்கில் வரவு வைத்துள்ளனர் வங்கி அதிகாரிகள். அன்பரசன் அந்த பணத்தை மீண்டும் எப்படியாவது FD சேமிப்பில் செலுத்துவதற்காக ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் செவ்வாய்கிழமை மதியம் மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் அன்பரசனை தொடர்பு கொண்டு, தான் எஸ்பிஐ வங்கியில் இருந்து பேசுவதாக கூறி அன்பரசுவின் செல்போனிற்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார்.

அதில் உள்ள தகவல்களை நிரப்பி அனுப்பினால் அவரது வங்கிக் கணக்கை, FD சேமிப்பு கணக்காக மாற்றி விடுவதாக கூறியுள்ளார். அதை நம்பிய அன்பரசன், பான் அப்டேட் என்ற குறுஞ்செய்தி மூலம் வந்த லிங்கை திறந்து அதில் பான் எண், ஆதார் எண் ஆகியவற்றை பதிவிட்டு அனுப்பியுள்ளார்.

பிறகு அவருடைய செல்போன் எண்ணிற்கு வந்த ஓடிபி எண்ணை மர்மநபர் கேட்டுள்ளார்.

Related Post

அன்பரசு ஓடிபி எண்ணை கூறிய சிறிது நேரத்தில் அன்பரசுவின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்ட மர்மநபர்..

சரியான விவரங்களை பூர்த்தி செய்ததால் 25 ஆயிரம் ரூபாய் பணம் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டதாகவும் மீண்டும் 2நாளில் வரவு வைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

மீண்டும் உடனடியாக வரும் ஓடிபி எண்ணை தனக்கு அனுப்புமாறு கூறியுள்ளார். அதை நம்பி மீண்டும் ஓடிபி எண்ணெய் கூறிய அன்பரசுவின் வங்கி கணக்கிலிருந்து 10000, 5000, 10000 என எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இன்டர்நெட் பாங்கிங் மூலம் சென்று வங்கி கணக்கின் பண பரிவர்த்தனையை பார்த்த பொழுது வங்கியில் இருந்த மொத்த பணம் சுமார் 53 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை அடையாளம் தெரியாத நபர் மோசடி செய்து எடுத்து விட்டது தெரியவந்தது

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வில்லிவாக்கம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அன்பரசுவின் வங்கிக் கணக்கிலிருந்து திருடப்பட்ட பணமானது SPECIAL TERM DEPOSIT என்ற தனி கணக்கிற்கு சென்றுள்ளது. பிறகு அந்த STDR கணக்கில் இருந்து வேறு கணக்கிற்கு மாற்ற 4 மணி நேரம் முதல் 1 நாள் வரை காத்திருக்க வேண்டும்

ஆனால் அதற்குள் அன்பரசு தனது இன்டர்நெட் லாக் இன் மூலம் வங்கிக் கணக்கை லாக் செய்து சைபர் கிரைமில் புகார் கொடுத்துள்ளார். இதனால் 16 மணி நேரத்தில் பணம் திரும்ப பெறப்பட்டது.

ஆனால் இதுபோன்ற ஆன்லைன் குறுஞ்செய்தி மோசடி வழக்குகளில், குற்றவாளிகளை இதுவரை கைது செய்யப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் மோசடியில் ஈடுபடும் இதுபோன்ற குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.

Share

Recent Posts

படப்பிடிப்பில் ஜெய்க்கு நிகழ்ந்த விபரீதம்.! ஆனாலும், அவர் செய்த நல்ல விஷயம்.!

பிரபல தமிழ் நடிகர் ஜெயின் அர்ப்பணிப்பை கண்டு படக்குழு ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.கோலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஜெய்.…

5 hours ago

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை. சற்றுமுன் பரபரப்பு தகவல்.!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சனிக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து கிழக்கு…

5 hours ago

இது எப்போ வரும்னு தெரியல.. கன்னடத்தில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம்.. ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்.!!

KGF இரண்டாவது பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நிலையில் அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.கன்னட படங்களில்…

5 hours ago

அருள்நிதியின் ‘தேஜாவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

அருள்நிதி நடித்து வரும் 'தேஜாவு' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.தேஜாவு என்று தலைப்பிட்டுள்ள அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கும் இந்த…

5 hours ago

கணவனான காதலன்.. சீரியல் நடிகையின் 8 வருட கனவு.. தலைமையேற்ற புன்னகை மன்னன்.!!

பாடலாசிரியர் சினேகனின் திருமணம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரும் பிக்பாஸ் நிகழ்ச்சி…

5 hours ago

ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது ‘பிசாசு 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ஆண்ட்ரியா நடித்து வரும் 'பிசாசு 2' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது.2014 ஆம் ஆண்டு…

5 hours ago