Categories: தமிழகம்

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும்: தமிழக அரசு

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என பொதுமக்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கொரோனா தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 6,711 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 2105 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பதை தடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மருத்துவ வல்லுநர் குழுவுடன் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பல முக்கிய அறிவுறுத்தல்கள் சுகாதாரத் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Related Post

அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. வீட்டை விட்டு வெளியே வரும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், தனி மனித இடைவெளியை (6 அடி இடைவெளி) கடைபிடிக்க வேண்டும், முறையாக சோப்பு போட்டு, அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

திருமணங்களில் 100 நபர்கள் மற்றும் துக்க நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல், வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும், நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

10 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

10 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

10 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

10 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

10 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

10 months ago