Tamil News Today Live: தமிழ்நாடு மற்றும் இந்தியா சார்ந்த செய்திகளின் தொகுப்பை உடனடி அப்டேட்களுடன் இந்தத் தளத்தில் காணலால். லேட்டஸ்ட் செய்திகளை அறிய இணைந்திருங்கள். இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் லைவ் ப்ளாக் இது!
தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) மழை தொடர்கிறது. நாளை தீபாவளி தினத்தன்றும், அடுத்த நாளும்கூட மழை தொடர வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் இன்று கன மழை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருக்கிறார்.
தீபாவளியையொட்டி சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வார விடுமுறை நாளான இன்று செயல்படுகிறது.
இன்றைக்கு பதில் தீபாவளிக்கு மறுநாளான ஞாயிறன்று கோயம்பேடு மார்க்கெட் செயல்படாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை தி.நகர் உள்ளிட்ட வணிக பகுதிகளில் மக்கள் சமூக இடைவெளியை மறந்து பெருமளவில் கூடி, தீபாவளி பர்சேஸ் செய்யும் காட்சிகள் பலரையும் அதிர வைத்திருக்கிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு 9,510 பேருந்துகள் இயக்கப்பட்டன. எனினும் கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் பயணிகளின் கூட்ட நெரிசல் அதிகமானது. சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி நகரங்களுக்கு விமானக் கட்டணமும் 2 அல்லது 3 மடங்காக உயர்ந்தது.
சென்னையில் தொடர்ந்து விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14க்கும், டீசல் ரூ.75.95க்கும் விற்பனை செய்யப்படுகிறது
‘தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil’
Tamil Nadu News In Tamil Live: தமிழகத்தில் கூட்டுறவு ஊழியர்களுக்கு 10 சதவிகித போனஸ் அறிவிக்கப்பட்டது. தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது. ஏற்கனவே இதர பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இதே அளவு போனஸ் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநிலத் தலைவர் முருகன் நேற்று சந்தித்தார். வேல் யாத்திரைக்கு அரசு தடை விதித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. எனினும் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவிக்கவே அவர்களை தனித்தனியே சந்தித்ததாக முருகன் குறிப்பிட்டார்.
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…