` அம்பு எய்தது யார்…?’ – கமல் இல்லத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் கொதிக்கும் ம.நீ.ம

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இல்லத்தில், `கொரோனாவினால் தனிமைப்படுத்தப்பட்டவர்’ என்ற சுவரொட்டியை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஒட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்பு, அது தவறாக ஒட்டப்பட்டதாகக் கூறி சுவரொட்டி அகற்றப்பட்டது. இந்தச் சம்பவம் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களைக் கோபம் கொள்ள வைத்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நம்மிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிலாளார் அணியின் மாநிலச் செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி, ” கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க தனது இல்லத்தையே ஏழை எளிய மக்களின் மருத்துவமனையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்து, தமிழக அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறார் எங்கள் தலைவர்.
அவரின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில், இப்படியொரு சுவரொட்டியை ஒட்டியுள்ளனர்.

அவரைத் தனிமைப்படுத்தியிருப்பதாக சித்திரிக்க முயன்ற சென்னை மாநகராட்சிக்குக் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே பார்க்கிறோம்.

Related Post

எத்தனை இடையூறுகள், பழிவாங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் எங்களது தலைவர் அனைத்தையும் முறியடித்து பீனிக்ஸ் பறவைபோல் மீண்டும் வருவார் .

இந்த விவகாரத்தில் மாநகராட்சி ஊழியர்கள் அம்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இந்த அம்புகளை எய்தது யார் என்பதைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்தச் செயலுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

மக்கள் நீதி மய்யம் தொண்டர்களும் ரசிகர்களும் அச்சப்பட வேண்டாம். நம்மவர் நலமாகவே இருக்கிறார் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

Share
Tags: vikatan

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago