திருப்பூர்: கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பழைய, புதிய பேருந்து நிலையங்கள் செவ்வாய்க்கிழமை மாலை வெறிச்சோடியது.
கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதிலும் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் அறிவித்துள்ளர்.
இந்த தடைக்காலத்தில் முழுமையாகத் திருப்பூர் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டிருக்கும். மேலும், தடை உத்தரவு அமலில் இருக்கும் காலத்தில் 5 நபர்களுக்கு மேல் பொது இடங்களில் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. சிறிய மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் மற்றும் உணவகங்கள், தேநீர் கடைகள், அம்மா உணவங்கள், மருந்தகங்கள், ஆவின் பால் விற்பனை நிலையங்கள், அரசு நியாய விலை கடைகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தவிர மற்ற அனைத்து வியாபார நிறுவனங்களும் இயங்காது. அதே வேளையில் சில அத்தியாவசிய துறைகள் தவிர இதர அனைத்து அரசு அலுவலகங்களும், பொதுத்துறை நிறுவனங்களும் இயங்காது. அத்தியாவசிய பண்டங்கள், உணவுப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் மருந்துபொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள், அவசர ஊர்திகள் (ஆம்புலன்ஸ்) தவிர இதர அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஒப்பந்த வாகனங்கள், வாடகைக் கார்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கம் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. வங்கிகள், ஏடிஎம் மையங்கள், பெட்ரோல் விற்னை நிலையங்கள், எரிவாயு விநியோக மையங்கள், விவசாய விலை பொருட்கள் விற்பனை மையங்கள், கால்நடை தீவன விற்பனை கடைகள், வழக்கம் போல் செயல்படும். உணவகங்களில் உணவருந்த அனுமதியில்லை எனினும் பார்சல் வாங்கிச் செல்லலாம். தேநீர் கடைகளில் அதிக கூட்டம் கூடுவதற்கு அனுமதியில்லை. மருத்துவ உபகரணங்கள், மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்குவதற்கு தடையில்லை.மின்சார விநியோகம், குடிநீர் விநியோகம், தபால் மற்றும் தொலைபேசி சேவைகள், குடிநீர்கேன் விநியோகம் ஆகியவைகள் வழக்கம் போல் செயல்படும். மார்ச் 16 ஆம் தேதிக்கு முன்னர் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் மட்டும் அதிகபட்சம் 30 பேருடன் திருமணத்தை நடத்திக் கொள்ளலாம்.
கரோனா வைரஸ் நோய் பரவலைத் தடுத்திடும் பொருட்டு மாவட்டத்தில் துணை ஆட்சியர் நிலையில் ஒவ்வொரு வட்டத்திற்கும் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு வட்டத்திலும் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து நோய் தொற்று பரவாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்வது உட்பட அனைத்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளவர்களை கண்காணிக்க வருவாய்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அலுவலர்களைக் கொண்டு தனிமைப்படுத்தலைக் கண்காணிக்கும் குழு, மருத்துவமணை வளாகத்தினுள் சுகாதாரத்துறை அலுவலர்களைக் கொண்டு தூய்மைப்படுத்துதல் மற்றும் தொற்று நீக்குதல் குழு, பொது இடங்களில் சமூக விலகல் மற்றும் பின்பற்றுதலை கண்காணிக்க பல்துறை அலுவலர்களைக் கொண்ட குழுக்கள் உள்ளிட்ட கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.
எனவே, கரோனா வைரஸ் நோய் தாக்குதலிலிருந்து பொது மக்களை காத்திடும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் அனைவரும் முழுஒத்துழைப்பு நல்கிடுமாறும், தடை உத்தரவு அமலில் உள்ள காலத்தில் முழுமையாக அரசின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு அதற்கேற்ப செயல்படுமாறு ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பழைய, புதிய பேருந்து நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. மேலம், ரயில் நிலையம் உள்ளிட்ட மாநகரின் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டது. முன்னதாக தடை உத்தரவு எதிரொலியாக திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…