Categories: தமிழகம்

நெல்லை கண்ணன் ஜாமீன் மனு மீதான விசாரணை ஜன.9-க்கு ஒத்திவைப்பு

பிரபல பேச்சாளர் நெல்லை கண்ணன் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் வியாழக்கிழமைக்கு (ஜன 9) ஒத்திவைக்கப்பட்டது.

மேலப்பாளையத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசியபோது பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக பிரபல பேச்சாளர் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவரது ஜாமீன் மனு மீதான விசாரணையை திருநெல்வேலி முதன்மை அமர்வு நீதிமன்றம் நாளை மறுநாளுக்கு (ஜன.9) ஒத்திவைத்துள்ளது.

முன்னதாக, மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கடந்த 29-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
அதில் சிறப்பு பேச்சாளராக பங்கேற்ற நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் மேலப்பாளையம் போலீஸார் வழக்குபதிவு செய்தனர்.

Related Post

கடந்த 1-ம் தேதி நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 13-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே ஜாமீன் கேட்டு நெல்லை கண்ணன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு திருநெல்வேலி 2-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் பிரம்மா தாக்கல் செய்துள்ள இந்த மனு திருநெல்வேலி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி நஷீர் அகமது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கு விசாரணைக்கு அரசுத் தரப்பில் கால அவகாசம் கோரியதை அடுத்து விசாரணையை நாளைக்கு (9-ம் தேதி) நீதிபதி ஒத்திவைத்தார்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago