Categories: தமிழகம்

ரயிலில் கேட்பாரற்று கிடந்த பச்சிளம் குழந்தை – காஞ்சிபுரத்தில் பரபரப்பு

சென்னை கடற்கரை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு காஞ்சிபுரம் வழியாக திருமால்பூர் வரை மின்சார ரயில் இயக்கப்படுகிறது. இதில் கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், தனியார் மற்றும் அரசு நிறுவன ஊழியர்கள் சென்று வருவது வழக்கம்.

தினமும் 2 மணிநேரத்துக்கு ஒரு முறை இயக்கப்படும் இந்த மின்சார ரயில், இரவு 8.30 மணிக்கு கடைசியாக இயக்கப்படும். இதனால், இதில் நூற்றுக்கணக்கான கூட்டம் நிரம்பி வழியும்.

இந்நிலையில் நேற்று இரவு சென்னை கடற்கரை ரயில் நிலைய சந்திப்பில் இருந்து ரயில் புறப்பட்டது. இரவு 10.30 மணியளவில் திருமால்பூர் சென்றடைந்தது. அப்போது, அதில் இருந்த ஒரு பெட்டியில் குழந்தையின் அழுகை குரல் கேட்டது.
இதனால், அங்கிருந்த ரயில்வே துப்புரவு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Related Post

இதையடுத்து ரயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ரயிலில் சோதனை செய்து பார்த்தபோது, பிறந்த 3 நாட்களே ஆன் பச்சிளம் பெண் குழந்தை அழுது கொண்டிருப்பதை கண்டனர்.

தகவலறிந்து செங்கல்பட்டு ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். ரயில்வே அதிகாரிகளிடம் இருந்த பச்சிளம் குழந்தையை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் ஒப்படைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலில் பிறந்ததாள் குழந்தை வீசப்பட்டதா, ஆண் குழந்தை என நினைத்து கடத்தி வந்த பின் பெண் குழந்தை என தெரிந்ததால் ரயிலில் விட்டு சென்றனரா அல்லது வேறு காரணமா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago