ஜனாதிபதி தேர்தல் வாக்குபதிவு நிறைவு… விசேட பாதுகாப்பு வாக்கு எண்ணும் பணிகள்

கொழும்பு: வாக்களிக்கும் நடவடிக்கைகள் நிறைவு…இலங்கை சோஷலிச குடியரசின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் 8ஆவது தேர்தலுக்கான வாக்களிக்கும் நடவடிக்கைகள் நிறைவுபெற்றுள்ளன.

நாடளாவிய ரீதியில் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் வாக்களிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மாலை 5 மணியுடன் வாக்களிப்பதற்கான நேரம் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் 05.15 மணி முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்த பின்னர் வாக்குப் பெட்டிகள் வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்திற்கு கொண்டுசெல்லும் பணிகளும் ஆரம்பமாகியுள்ளன.

Related Post

இந்நிலையில், வாக்குகள் எண்ணும் பணி விசேட பாதுகாப்பின் கீழ் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதற்காக 60,175 பொலிஸார் மற்றும் 8,080 சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
Tags: vivegam

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago