Categories: தமிழகம்

புளியங்குடியில் பெட்டிக்கடை-கோவில்களில் கொள்ளை

புளியங்குடி பாம்புக்கோவில் சந்தை சாலையில் உள்ள பிரசித்தி பெற்றது கற்குவேல் அய்யனார் கோவில். இந்த கோவிலை வழக்கம்போல் நேற்று பூட்டி விட்டு நிர்வாகிகள் சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலை கோவிலை திறப்பதற்காக அவர்கள் வந்துள்ளனர். அப்போது கோவிலின் முன்பு அந்த வழியாக செல்பவர்கள் கூட்டமாக நின்று கோவில் உண்டியல் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இந்த கோவிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்பது தெரிந்தது. பின்னர் புளியங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இதே பகுதியில் உள்ள பாலவிநாயகர் கோவில் மற்றும் அதன் அருகே உள்ள சக்தி விநாயகர் கோவில் ஆகிய இரண்டு விநாயகர் கோவிலிலும் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

Related Post

அதே பகுதியில் காமராஜ் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று இவர் வழக்கம் போல் கடை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை வந்து பார்க்கும் போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கடை உள்ளே சென்ற மர்ம நபர்கள் சுமார் 10 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அங்கு உள்ள பொருட்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாகவும் புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago