பாம்பனில் புதிய பாலம்… நவம்பர் 1ம் தேதியிலிருந்து கட்டுமான பணிகள் துவக்கம்..!!!

நூற்றாண்டை கடந்த பாம்பன் ரயில் பாலம் சேதம் அடைந்து வரும் நிலையில், அதன் அருகே புதிய பாலம் அமைப்பதற்கு மத்திய அரசு 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. பல்வேறுக் கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு வரும் நவம்பர் 1ம் தேதியிலிருந்து புதிய பாலத்திற்கான கட்டுமானப் பணிகள் துவக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Post

ராமேசுவர தீவினை இணைக்கும் பொருட்டு பாம்பன் கடல் பகுதியில் கடந்த 1914-ம் ஆண்டு சுமார் 2 கி.மீ நீளத்திற்கு ரயில் பாலம் அமைக்கப்பட்டது. 105 வருடங்களாக போக்குவரத்துக் காரணியாக இருந்த பாம்பன் பாலத்தின் தூக்குப்பாலம் வலுவிழுந்ததாக கடந்த 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.
தொடர்ச்சியாக 83 நாட்கள் முற்றிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில், பழைய பாலத்திற்கு அருகிலேயே ரூ.250 கோடி செலவில் புதியபாலம் கட்டப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து மண்பரிசோதனை மற்றும் பலக் கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்த நிலையில் மார்ச் மாதம் பதிய பாலத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களாக புதிய பாலம் அமைப்பதற்கான கட்டுமான பொருட்கள் பாம்பன் பகுதியில் வந்திறங்கிய நிலையில் கடலுக்குள் காங்கிரட் பில்லர் அமைக்க இரும்புக்கம்பிகள் வெட்டும் வேலை துவங்கியுள்ளது. இதனையடுத்து நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து புதிய கட்டுமான பணிகள் துவங்கும் எனத் தெரியவருகிறது. இதனால் ராமேசுவர தீவு பகுதி மக்கள் மட்டுமின்றி யாத்ரகர்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago