Categories: தமிழகம்

நாகர்கோவில் மாநகரில் ரூ65 லட்சம் மதிப்பில் 270 காமிராக்கள்: கட்டுப்பாட்டு அறை திறப்பு விழாவில் எஸ்பி பேட்டி

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகரில் திருட்டு, வழிப்பறி, விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி செல்லும் வாகனங்களை கண்டறிய மணிமேடை, கோட்டாறு, வடசேரி, அண்ணா பஸ் நிலையம் உள்பட முக்கிய சந்திப்புகளில் காவல்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் கண்காணிப்பு காமிராக்கள் பொறுத்தப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுப்பாட்டு அறை எஸ்பி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாவட்ட வன அலுவலர் ஆனந்த், ஏஎஸ்பி ஜவஹர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்த எஸ்பி நாத் நிருபர்களிடம் கூறியதாவது: குமரி மாவட்டம் முழுவதும் திருட்டு, வழிப்பறி சம்பவங்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு காமிராக்கள் பொறுத்தப்பட்டு வருகின்றன.
நாகர்கோவில் மாநகாட்சியில் ஏற்கனவே அண்ணா பஸ் நிலையம், மீனாட்சிபுரம், வடசேரி பஸ் நிலையம் ஆகிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. தற்போது நாகர்கோவில் மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் மாநகர் முழுவதும் முக்கிய இடங்களில் 270 காமிராக்கள் பொறுத்தப்படுகின்றன. இதில் 150 காமிராக்கள் ஏற்கனவே பெறுத்தப்பட்டுவிட்டன. மீதம் உள்ள காமிராக்கள் உடனடியாக பொறுத்தப்படும். இந்த காமிராக்கள் எஸ்பி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். இதற்காக 24 மணி நேரமும் போலீசார் பணியில் இருப்பார்கள். இதே போல் குலசேகரம், கருங்கல், மார்த்தாண்டம் பகுதிகளிலும் காமிராக்கள் பொறுத்தும் பணி நடந்து வருகிது. சப்-டிவிஷன்களில் அமைக்கப்படும் காமிரா டிஎஸ்பி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். கன்னியாகுமரியில் 100 காமிராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு காமிரா பொறுத்தப்பட்ட பின்னர் செயின் பறிப்பு வெகுவாக குறைந்து உள்ளது. காமிரா மூலம் விபத்துகளை ஏற்படுத்திவிட்டு தப்பி செல்லும் வாகனங்களை கண்டறிய முடியும். சட்ட ஒருங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.சாலைகள் விரைவில் சீரமைப்பு கலெக்டர் தகவல்கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியதாவது: அவ்வைசண்முகம் சாலை உள்பட பாதாள சாக்கடை, புத்தன் அணை திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகள் விரைவில் சரி செய்யப்படும். தற்போது மழை பெய்வதால் பணி மெதுவாக நடக்கிறது. வரும் ஜூன் 2020க்குள் பாதாள சாக்கடை பணிகள் முடிவடையும். மேலும் ஒரு இடத்தில் ேதாண்டினால் அந்த இடத்தை மூடிய பின்னரே வேறு இடத்தில் பள்ளம் தோண்ட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. கோட்டாறு பகுதியில் லாரிகள் நிறுத்தத்தை முறைப்படுத்தவும், சென்டர் மீடியன் பொறுத்தி இருவழி பாதை அமைக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல் பாலமோர் சாலை சீரமைப்பு பணியும் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago