Categories: தமிழகம்

அம்மாவுக்கு சப்போர்ட்: எடப்பாடிக்கு ரிப்போர்ட்!? – ஸ்டாலினின் புதிய அறிக்கை

காவிரியில் தடுப்பணை கட்டாமல், நீர் மேலாண்மை பற்றி தெரிந்து கொள்ள இஸ்ரேல் போவதாக எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது வினோதமான வேடிக்கையாக இருக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.ச் நேற்று நாடு திரும்பிய அவர் முதலீடுகளை ஈர்க்க செல்லவில்லை சுற்றுலா பயணம் சென்று வந்திருக்கிறார் என விமர்சித்தார் மு.க.ஸ்டாலின். இந்நிலையில் நீர் மேலாண்மை குறித்து அறிந்து கொள்வதற்காக இஸ்ரேல் செல்லப்போவதாக அறிவித்திருக்கிறார் எடப்பாடியார்.இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட மு.க.ஸ்டாலின் ‘காவிரியில் கொள்ளிடம் ஆற்றில் உடைந்த அணையை சரி செய்யாததால் 2000 கன அடி நீர் கடலில் சென்று கலந்து கொண்டிருக்கிறது.
இன்னும் டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேரவில்லை. ஆனால் இதெல்லாம் கண்டுகொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி தனது அடுத்த சுற்றுலா பயணத்திற்கு தயாராகி கொண்டிருக்கிறார்.மறைந்த முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது கொள்ளிடத்தில் 6 டி.எம்.சி தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் நாகப்பட்டிணம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் இடையே 480 கோடி செலவில் தடுப்பணைகள் மற்றும் கதவணைகள் கட்டும் திட்டத்தை அறிவித்தார். ஆனால் 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் எடப்பாடி பழனிசாமி அரசு அந்த திட்டத்தை நிறைவேற்றவில்லை. மக்களின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த அந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த திரு.பழனிசாமி முன்வர வேண்டும்’ என்று கூறியுள்ளார்.தான் பேசும் மேடைகளில் எல்லாம் தி.மு.கவையும், முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களையும் விமர்சித்து வந்தவர் ஜெயலலிதா. தற்போது ஜெயலலிதாவின் திட்டத்தை பாராட்டியும், அதை செயல்படுத்தாத எடப்பாடியாரை கண்டித்தும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ஸ்டாலின். இது அரசியல் வட்டாரங்களில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago