Categories: தமிழகம்

Tamil Nadu news today live updates: மேற்கு வங்கத்தில் பாஜக இளைஞர் அணி போராட்டம்

மூதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பெறப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா என்று அறிக்கை விட்டிருந்தார். ஸ்டாலினின் கேள்விக்கு ஆர்.பி.உதயகுமார் அமைச்சர் பதிலளித்து பேசுகையில், வெள்ளை அறிக்கை கேட்டவர்கள் முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வெள்ளை மனதுடன் பார்க்க வேண்டும். உலகத் தமிழர்களின் நன்மதிப்பை முதல்வர் பெற்றதை எதிர்க்கட்சித் தலைவரால் பொறுக்க முடியவில்லை என்று விமர்சனம் செய்துள்ளார்.

ஆந்திரப்பிரதேசத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பேரணி நடத்த முயன்ற தெலுங்குதேசம் தலைவர்களை அம்மாநில அரசு வீட்டுக்காவலில் வைத்துள்ளது.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசியல்வன்முறையில் ஈடுபடுவதாக புகார் தெரிவித்து இன்று பேரணி நடத்த தெலுங்கு தேசம் அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், அவருடைய மகன் மகன் நரலோகேஷையும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் பெட்ரோல் விலை நேற்றையை விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.74.56-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.68.84க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Post

இது போல தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை இந்த லைவ் பிளாக்கில் காணலாம்.

முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் நேற்று அதிகாலை சென்னை திரும்பினார். முதல்வர் வெளிநாடு சுற்றுப்பயணம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டதன் மூலம் எவ்வளவு வெளிநாடு முதலீடுகளை பெற்றுள்ளார் என்பதை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரினார்.

பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது முறையாக பாஜகவின் 100 நாள் ஆட்சி பற்றி செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வாகன உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள சரிவு பற்றி ஆலோசித்ததாகவும் அதற்கு பல காரணங்கள் இருப்பதாகவும் கூறினார். மேலும், வங்கிகள் இணைப்பால் இந்தியாவின் பொருளாதாரம் அடுத்த நிலைக்கு மேம்பட்டு செல்கிறது என்று கூறினார்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago