Categories: தமிழகம்

கொளத்தூர் கிராமத்தில் பாதியில் நின்ற பேருந்து நிழற்குடை பணி: ஊழல் முறைகேடா?

செய்யூர்: சித்தாமூர் அருகே கொளத்தூரில் மக்களவை தேர்தலுக்கு முன் ₹5 லட்சத்தில் பேருந்து நிழற்குடை அமைக்கும் பணி, ஊழல் முறைகேட்டினால் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டதா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மதுராந்தகம் ஒன்றியம், சரவம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கொளத்தூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இக்கிராமத்தின் வழியாக மதுராந்தகத்தில் இருந்து செய்யூர் வரை ஒரே ஒரு அரசு பேருந்து இயங்கி வருகிறது.இக்கிராம மக்களின் வசதிக்காக, முன்னாள் அதிமுக எம்பி மரகதம் குமரவேலின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ், கடந்த 8 மாதங்களுக்கு முன் ₹5 லட்சத்தில் புதிய பேருந்து நிழற்குடை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.
பின்னர் மக்களவை தேர்தலில் அக்கட்சி தோல்வி அடைந்தது. இதனால் இங்கு நிழற்குடை அமைக்கும் பணிகள் 30 சதவிகிதம் நிறைவடைந்த நிலையில் அப்படியே கிடப்பில் போடப்பட்டு உள்ளது. தற்போது இந்த நிழற்குடை மக்களிடையே பரிதாபமாக காட்சியளிக்கிறது.கொளத்தூர் கிராமத்தில் பாதியில் நின்றுபோன நிழற்குடை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், அந்த நிழற்குடை அமைப்பதில் ஏராளமான ஊழல் முறைகேடுகள் நடந்ததாகவும், அதுதொடர்பான விசாரணை நிலுவையில் இருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது.எனவே, கொளத்தூர் கிராமத்தில் அரைகுறையாக நிறுத்தப்பட்ட பேருந்து நிழற்குடை பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago