Categories: தமிழகம்

Vellore lok sabha election results : பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது – அமைச்சர் ஜெயக்குமார்

Vellore lok sabha election results 2019 live : ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட்டது. பணப்பட்டுவாடா கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தால் வேலூர் மாவட்டத்தில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், அந்த தேர்தல் திங்கள் கிழமை (05/08/2019) அன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, நாம் தமிழர் போன்ற பெரிய கட்சிகள் நேரடியாக போட்டியிட்டனர். மக்கள் நீதி மய்யம், அமமுக கட்சியினர் இந்த தேர்தலில் பங்கேற்கவில்லை. To read in English

வேலூர் தொகுதியின் முழு விபரம் – வீடியோ

Vellore Lok Sabha Election Result 2019 Live Counting : முக்கிய வேட்பாளர்கள்

வேட்புமனு தாக்கல் ஜூலை 11ம் தேதி துவங்கி 18ம் தேதி வரை நடைபெற்றது.
50 மனுக்கள் வரை போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்டது. மனுக்கள் மீதான பரிசீலனை 19ம் தேதி அம்மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகம் தலைமையில் நடைபெற்றது. 19 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. சுயேட்சை வேட்பாளர்களாஅன ஜே. அசேன், ஏ.ஜி.சண்முகம், மற்றும் தனலட்சுமி ஆகியோர் தங்களின் வேட்புமனுக்களை ஜூலை 22ம் தேதி வாபஸ் பெற்றனர்.

அதிமுக – ஏ.சி. சண்முகம்

திமுக – திமுக பொருளாளர் மகன் கதிர் ஆனந்த்

நாம் தமிழர் – தீபலட்சுமி

Related Post

28 வேட்பாளர்கள் போட்டியிட ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் முடிவுற்றது. 18 சுயேட்சைகள் இங்கு போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : Vellore Lok Sabha Election: வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் 72% வாக்குப்பதிவு

வாக்கு பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் அனைத்தும் ராணிப்பேட்டையில் உள்ள எஞ்சினியரிங்க் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. மூன்றடுக்கு பாதுகாப்புடன் துணை நிலை ராணுவ வீரர்கள், சிறப்பு காவல்படையினர் மற்றும் தமிழக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குகள் 6 அறைகளில் நடைபெறும். 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு முன்னணி நிலை அறிவிக்கப்படும். காலை 8 மணியில் இருந்து வாக்குப்பதிவு துவங்க உள்ளது. இந்த பணி எந்த பிரச்சனையின்றி நடைபெற 72 சிசிடிவி கேமராக்கள் வாக்கு எண்ணும் மையத்தில் பொறுத்தப்பட்டுள்ளன.

Vellore Election: Thanthi Exit Poll Results

தந்தி டிவி தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டது. அதில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதில் திமுக கூட்டணிக்கு – 46% முதல் 52% வாக்குகளை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறியுள்ளது. அதிமுக கூட்டணி – 41% முதல் 47% வரையிலான வாக்குகளை பெற வாய்ப்புகள் உள்ளதாக அறிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சி 4% முதல் 7% வாக்குகளை பெறும் என்றும் இதர கட்சிகள் 3% முதல் 6% வரை வாக்குகளை பெறும் என்று அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago