Categories: தமிழகம்

பொன்பரப்பியில் மறுவாக்குப் பதிவுக்கு வாய்ப்பில்லை: சத்யபிரத சாகு

சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பொன்பரப்பியில் மறுவாக்குப் பதிவுக்கு வாய்ப்பில்லை என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். இதுகுறித்து, அவர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி: தமிழகத்தில் மக்களவை, 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நிறைவடைந்தாலும் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகின்றன. அதன்படி, உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் ரூ.16.43 லட்சம் பறிமுதல் ஆகியுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் இதுவரையில் ரூ.141.88 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுரை சம்பவம்: மதுரை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட மதுரை மேற்கு பேரவைத் தொகுதி தொடர்பான ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு வட்டாட்சியர் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தும் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் பணியிடம் மாற்றப்பட்டுள்ளார். பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரி நடராஜன், என்னை நேரில் சந்தித்து மதுரை சம்பவம் தொடர்பான விளக்க அறிக்கைகளை அளித்துள்ளார். அதிலுள்ள அம்சங்களை ஆராய்ந்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அவருக்கு இப்போது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையில் இணைச் செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. பொன்பரப்பியில் மறுவாக்குப் பதிவா?: சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பொன்பரப்பியில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டுமென வாக்குப் பதிவுக்கு மறுநாளன்று தேர்தல் நடத்தும் அதிகாரியிடமோ அல்லது பொதுபார்வையாளரிடமோ கோரிக்கை மனு ஏதும் அளிக்கப்படவில்லை. இப்படியொரு மனு அளிக்கப்படாத சூழ்நிலையில், மறுவாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தேர்தல் துறை சார்பில் எந்தப் பரிந்துரையும் செய்ய முடியாது. நடிகர்கள் விவகாரம்: நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் ஆகியோர் வாக்களித்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரி விசாரணையை நடத்துவார். இதில் தொடர்புடைய வாக்குச் சாவடி அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்படும். பின்னர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஆணையத்துக்கு அந்த விசாரணை அதிகாரி பரிந்துரை செய்வார். ஆணையம் இதில் நடவடிக்கை எடுக்கும். சம்பந்தப்பட்ட நடிகர்களை விசாரணைக்கு அழைப்பது தொடர்பாக விசாரணை அதிகாரியே முடிவு எடுப்பார் என்றார் சத்யபிரத சாகு.

Related Post
Share
Tags: dinamani

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

10 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

10 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

10 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

10 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

10 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

10 months ago